சிறப்புக் கட்டுரைகள்

வானவில்: ஜியோமியின் எலெக்ட்ரிக் ஷேவர் + "||" + Vanavil : xiaomi Electric Shaver

வானவில்: ஜியோமியின் எலெக்ட்ரிக் ஷேவர்

வானவில்: ஜியோமியின் எலெக்ட்ரிக் ஷேவர்
பொதுவாக பிளேடு மூலம் ஷேவிங் செய்து பழக்கப்பட்டவர்களுக்கு மின்சாரத்தில் செயல்படும் ஷேவிங் இயந்திரங்கள் அவ்வளவாக பிடிப்பதில்லை.
 பிளேடு மூலம் ஷேவ் செய்யும்போது ஒரே சீராக கோடு கிழித்ததைப் போன்று ஷேவ் செய்யலாம். ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் பேட்டரி ஷேவரை சுழலும் தன்மையோடு வடிவமைத்து உள்ளன. இதனாலேயே பிளேடு, ரேஸர் பயன்படுத்தியவர்களுக்கு பேட்டரி ஷேவர் ஏற்புடையதாக இருப்பதில்லை. ஆனால் தற்போது ஜியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த ஷேவர் பிளேடு, ரேஸர் போன்று செயல்படுகிறது.

இதனால் பிளேடு பயன்படுத்தி ஷேவ் செய்பவர்களுக்கு மிகவும் உபயோகமானது. ‘எம்.எஸ்.என். ஷேவர்’ என்ற பெயரில் இது வெளிவருகிறது. இது 155 மி.மீ. நீளம், 32 மி.மீ. அகலம் கொண்டது. இதன் எடை 70 கிராம் மட்டுமே. யு.எஸ்.பி. மூலம் இதை சார்ஜ் செய்யலாம். நேரடியாக தண்ணீர் குழாயில் காண்பித்து சுத்தம் செய்யலாம்.

இதனால் இது பாதிப்புக்குள்ளாகாது. இதன் விலை சுமார் ரூ.1,250. இந்தியாவில் இந்த எம்.எஸ்.என். ஷேவர் விரைவில் அறிமுகமாகும் என்று தெரிகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...