சிறப்புக் கட்டுரைகள்

வானவில்: கதகதப்பு தரும் பவர் பேங்க் + "||" + Vanavil : Power bank that gives heat

வானவில்: கதகதப்பு தரும் பவர் பேங்க்

வானவில்: கதகதப்பு தரும் பவர் பேங்க்
ஜியோமி நிறுவனம் குளிர் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்காக இரட்டை பயன்பாடு கொண்ட பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது.
குளிர் பிரதேசங்களில் கைகளை வெளியில் நீட்டுவதே மிகவும் சிரமம். அத்தகைய சமயங்களில் கைகளுக்கு கதகதப்பான வெப்பத்தை தரும் வகையில் இந்த பவர் பேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,500.

இந்த பவர் பேங்கின் மேல் பாகம் அலுமினியத்தால் ஆனது. அதேசமயம் பல உள்ளடுகளைக் கொண்டது. இதனால் மின்சாரம் தாக்குமோ என்ற அச்சம் தேவையற்றது. இது பார்ப்பதற்கு அழகிய ரேடியோ போன்று காட்சியளிக்கும். இந்தியாவில் காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. எளிதில் தீப்பிடிக்காத வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மேல் பகுதியில் 2 பொத்தான்கள் உள்ளன. இடதுபுறம் உள்ள பொத்தான் மொபைல் சார்ஜ் செய்வதற்கும், பவர் பேங்கில் எஞ்சியுள்ள மின்திறனை காட்டும் விளக்கு எரியவும் பயன்படும். வலதுபுறம் உள்ள பொத்தானை 3 விநாடி தொடர்ந்து அழுத்தினால் இது வெப்பமாகத் தொடங்கும். எந்த அளவுக்கு சூடாகியுள்ளது என்பதையும் இதில் உள்ள பேனலில் தெரிந்து கொள்ளலாம். ஐந்து விநாடிகளில் இது சூடேறும். இதில் 5,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது. இதனால் அவசரத்துக்கு இதிலிருந்து ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்து கொள்ளலாம். பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் இது கிடைக்கும்.