சிறப்புக் கட்டுரைகள்

வானவில்: அமேசான் எக்கோ போர்ட்டபிள் ஸ்மார்ட் ஸ்பீக்கர் + "||" + Vanavil : Amazon Echo Portable Smart Speaker

வானவில்: அமேசான் எக்கோ போர்ட்டபிள் ஸ்மார்ட் ஸ்பீக்கர்

வானவில்: அமேசான் எக்கோ போர்ட்டபிள் ஸ்மார்ட் ஸ்பீக்கர்
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் புதிதாக எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.4,999 ஆகும்.
குரல்வழி கட்டளைப்படி இந்த ஸ்பீக்கர் செயல்படும். இதனால் இதை கைகளால் இயக்க வேண்டிய அவசியம் கிடையாது. இது அலெக்ஸாவுடன் இணைந்து செயல்படும்.

இதில் 4,800 எம்.ஏ.ஹெச். திறன்கொண்ட பேட்டரி உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் செயல்படும். இது உருளை வடிவில் இருப்பதால் இசை வெள்ளம் அறை முழுவதும் பரவும். அழகிய கண்கவர் பேப்ரிக் டிசைனைக் கொண்டுள்ளது. இதில் உள்ள எல்.இ.டி. விளக்கு பேட்டரியின் செயல் திறனை உணர்த்தும். இதில் உள்ள குரல்வழி கட்டுப்பாட்டு வசதி மூலம் அமேசான் பிரைம் மியூசிக், ஆப்பிள் மியூசிக், ஜியோ சாவ்ன், கானா ஆகியவற்றிலிருந்து பாடல்களை கேட்க முடியும். வீட்டில் உள்ள பிற இசைக் கருவிகள் மற்றும் பிற மின்னணு கருவிகளை இதில் இணைக்க முடியும்.