தொடர்ந்து 17 மாதமாக பின்னடைவு; சீனாவில், வாகனங்கள் விற்பனை 3.6% சரிவு


தொடர்ந்து 17 மாதமாக பின்னடைவு; சீனாவில், வாகனங்கள் விற்பனை 3.6% சரிவு
x

சீனாவில், நவம்பர் மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 3.6 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. இந்த வகையில் தொடர்ந்து 17-வது மாதமாக பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது.

நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (2019 ஏப்ரல்-ஜூன்) சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக குறைந்து இருந்தது. மூன்றாவது காலாண்டில் ஜூலை-செப்டம்பர்) அங்கு வளர்ச்சி 6 சதவீதமாக குறைந்து இருக்கிறது. அந்த இரண்டு காலாண்டுகளிலும் 27 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவு ஏற்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சீனாவில் மோட்டார் வாகனங்கள் விற்பனை தொடர்ந்து 17-வது மாதமாக சரிவை சந்தித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் அங்கு வாகனங்கள் விற்பனை 3.6 சதவீதம் குறைந்து இருக்கிறது. செப்டம்பரில் 5.2 சதவீதமும், அக்டோபரில் 4 சதவீதமும் விற்பனை சரிந்து இருந்தது. 

Next Story