சிறப்புக் கட்டுரைகள்

யூ.டி.ஐ. எம்.எப். பங்கு வெளியீட்டில் 1.04 கோடி பங்குகள் வரை விற்க பேங்க் ஆப் பரோடா திட்டம் + "||" + Bank of Baroda plans to sell 1.04 crore shares of UTI MF

யூ.டி.ஐ. எம்.எப். பங்கு வெளியீட்டில் 1.04 கோடி பங்குகள் வரை விற்க பேங்க் ஆப் பரோடா திட்டம்

யூ.டி.ஐ. எம்.எப். பங்கு வெளியீட்டில் 1.04 கோடி பங்குகள் வரை விற்க பேங்க் ஆப் பரோடா திட்டம்
பொதுத்துறையைச் சேர்ந்த யூ.டி.ஐ. எம்.எப். நிறுவனத்தின் பங்கு வெளியீட்டில் 1.04 கோடி வரை தனது பங்குகளை விற்பனை செய்ய பேங்க் ஆப் பரோடா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

எஸ்.யூ.யூ.டி.ஐ.

இந்திய பாராளுமன்றம், கடந்த 2002-ஆம் ஆண்டில் யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா சட்டத்தை நிறைவேற்றிய பிறகு யூ.டி.ஐ. மியூச்சுவல் பண்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் யூ.டி.ஐ. நிறுவனம் எஸ்.யூ.யூ.டி.ஐ. எனும் தனிப்பட்ட பொதுத்துறை ஏற்பு நிறுவனமாக மாறியது. இதன் வாயிலாக மத்திய அரசு பல முன்னணி தனியார் நிறுவனங்களில் பங்குகள் வைத்திருக்கிறது.

இந்திய பரஸ்பர நிதி துறையில் ஒரு காலத்தில் நம்பர் 1 இடத்தில் இருந்த யூ.டி.ஐ. மியூச்சுவல் பண்டு நிறுவனத்தில் பாரத ஸ்டேட் வங்கி, எல்.ஐ.சி., பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய பொதுத்துறை நிதி நிறுவனங்கள் தலா 18.5 சதவீத பங்கு மூலதனம் வைத்திருக்கின்றன. மீதம் உள்ள 26 சதவீத பங்குகள் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான டி ரவ் பிரைஸ் குழுமத்திடம் உள்ளன.

யூ.டி.ஐ. மியூச்சுவல் பண்டு நிறுவனம் கடந்த 2008-ஆம் ஆண்டிலேயே புதிய பங்குகள் வெளியிட திட்டமிட்டது. அதற்காக செபிக்கு விண்ணப்பமும் அனுப்பியது. ஆனால் சந்தை நிலவரங்கள் மோசமாக இருந்ததால் அப்போது அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இப்போது மீண்டும் பங்கு வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

பாரத ஸ்டேட் வங்கி இந்தப் பங்கு வெளியீட்டில் இந்நிறுவனத்தில் இருக்கும் மொத்த பங்குகளில் 8.25 சதவீதத்தை விற்று விட உத்தேசித்து இருப்பதாக தெரிகிறது. இதே போன்று எல்.ஐ.சி. உள்ளிட்ட மற்ற பொதுத்துறை நிறுவனங்களும் குறிப்பிட்ட அளவு பங்குகளை விற்பனை செய்யும் என தகவல் வெளியானது.

இந்நிலையில், யூ.டி.ஐ. எம்.எப். வெளியீட்டில் 1.04 கோடி வரை பங்குகளை விற்பனை செய்வதற்கு பேங்க் ஆப் பரோடாவின் முதலீட்டு கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது.

செபி அமைப்பு

யூ.டி.ஐ. மியூச்சுவல் பண்டு நிறுவனத்தில் தத்தம் பங்கு மூலதனத்தை 10 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் செபி அமைப்பு 2020 டிசம்பர் வரை கால அவகாசம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.


ஆசிரியரின் தேர்வுகள்...