சிறப்புக் கட்டுரைகள்

நடுக்கடலில் சர்வதேச விமான நிலையம் + "||" + International Airport in the Middle Sea

நடுக்கடலில் சர்வதேச விமான நிலையம்

நடுக்கடலில் சர்வதேச விமான நிலையம்
விமான நிலையத்தைக் கடலில் அமைக்க முடியுமா? அதுவும் சர்வதேச விமான நிலையத்தை அமைக்க முடியுமா? ‘முடியும்’ என நிரூபித்துக் காட்டியது ஜப்பான்.
கடல் நடுவே செயற்கைத் தீவு ஒன்றை உருவாக்கி, அதன் மீது பிரமாண்டமான விமான நிலையத்தையும் அமைத்திருக்கிறது ஜப்பான். அங்குள்ள கன்சாய் மாகாணத்தை ஒட்டிய ஒசாகா கடல் பகுதியில்தான் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் ‘கன்சாய்’. 

உலகிலேயே கடலில் அமைக்கப்பட்ட முதல் விமான நிலையம் இதுதான். இத்தாலியைச் சேர்ந்த ரென்கோ பியானோ என்ற கட்டிடக்கலை நிபுணரின் வடிவமைப்பை அடிப்படையாகக்கொண்டு இந்த விமான நிலையம் கடலில் கட்டப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் மொத்தப் பரப்பளவு 4 லட்சத்து 53 ஆயிரத்து 993 சதுர மீட்டர். உயரம் 36.64 மீட்டர். ஒரு அடித்தளம், நான்கு மேல் தளங்களுடன் இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. 1987-ம் ஆண்டு விமான நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கின. குறிப்பிட்ட பகுதியில் கடல் நீரை வெளியேற்றிவிட்டு, கல் மற்றும் மண்ணைக் கொண்டு நிரப்பும் முறையில் கட்டுமானப் பணிகள் நடந்தன. 

இதற்காக ஜப்பானில் உள்ள மலைக் குன்றுகள் தகர்க்கப்பட்டு மண்ணும் கல்லும் கொட்டப்பட்டன. இந்தப் பணிகள் முடிந்த பிறகு கட்டிடம் கட்டும் பணிகள் 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. பணிகள் முடிந்து 1994-ல் விமான நிலையம் திறக்கப்பட்டது. கடல் மேலே பிரமாண்டமாக அமைக்கப்பட்ட இந்த விமான நிலையத்தை உருவாக்க எவ்வளவு செலவாகியிருக்கும்? அந்தக் காலகட்டத்தில் 67 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவானதாம்.

தொடர்புடைய செய்திகள்

1. விமான நிலையம் தனியார் மயமாக்க எதிர்ப்பு - பிரதமருக்கு 2 லட்சம் இ-மெயில் அனுப்ப மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முடிவு
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு 2 லட்சம் இ-மெயில்கள் அனுப்பப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது.
2. 14-வயதுக்கு மேற்பட்ட பயணிகளுக்கு ஆரோக்கிய சேது செயலி கட்டாயம்- விமான பயணத்திற்கான புதிய வழிமுறைகள் வெளியீடு
25-ஆம் தேதி முதல் துவங்கும் உள்நாட்டு விமான சேவைகளுக்கான புதிய வழிகாட்டுதல் நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.