டிசம்பர் மாதத்தில் வாகனங்கள் விற்பனை


டிசம்பர் மாதத்தில் வாகனங்கள் விற்பனை
x
தினத்தந்தி 2 Jan 2020 10:37 AM GMT (Updated: 2 Jan 2020 10:37 AM GMT)

டிசம்பர் மாதத்தில் கார், பைக் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களின் விற்பனை நிலவரம் வருமாறு:-

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

புதுடெல்லி

மாருதி சுசுகி

மாருதி சுசுகி நிறுவனம், மொத்தம் 1.33 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தை காட்டிலும் இது 3.9 சதவீதம் உயர்வாகும். அப்போது விற்பனை 1.28 லட்சம் கார்களாக இருந்தது.

உள்நாட்டில் இதன் விற்பனை 3.5 சதவீதம் அதிகரித்து 1.25 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் சுவிப்ட், எஸ்டிலோ, டிசையர், பேலினோ உள்ளிட்ட காம்பாக்ட் கார்கள் விற்பனை 9.1 சதவீதம் அதிகரித்து 91,341-ஆக உயர்ந்து இருக்கிறது. மாருதி ஜிப்சி, கிராண்ட் விதாரா, எர்டிகா, எஸ் கிராஸ் மற்றும் காம்பாக்ட் விதாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட பன்முக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 2.5 சதவீதம் அதிகரித்து 1.22 லட்சமாக இருக்கிறது. ஏற்றுமதி 10.2 சதவீதம் உயர்ந்து 7,561-ஆக உள்ளது.

மகிந்திரா அண்டு மகிந்திரா

மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் மொத்தம் 39,230 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2018 டிசம்பரில் அது 39,755-ஆக இருந்தது. ஆக, விற்பனை 1 சதவீதம் குறைந்து இருக்கிறது. இதில் உள்நாட்டு விற்பனை 1 சதவீதம் அதிகரித்து (36,690-ல் இருந்து) 37,081-ஆக உயர்ந்து இருக்கிறது.

வர்த்தக வாகனங்கள் விற்பனை 16,018-ஆக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் அது 16,906-ஆக இருந்தது. பயணிகள் வாகனங்கள் விற்பனை 4 சதவீதம் உயர்ந்து (15,091-ல் இருந்து) 15,691-ஆக அதிகரித்து இருக்கிறது. ஏற்றுமதி 30 சதவீதம் சரிவடைந்து 2,149 வாகனங்களாக இருக்கிறது.

எஸ்கார்ட்ஸ்

எஸ்கார்ட்ஸ் நிறுவனம் 4,114 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் அது 4,598-ஆக இருந்தது. ஆக, விற்பனை 10.5 சதவீதம் குறைந்து இருக்கிறது. உள்நாட்டில் இந்நிறுவனத்தின் டிராக்டர்கள் விற்பனை 3,806-ஆக இருக்கிறது. இது 9.6 சதவீதம் சரிவாகும். ஏற்றுமதி 20 சதவீதம் குறைந்து 308 டிராக்டர்களாக இருக்கிறது.

ஹூண்டாய் மோட்டார்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், மொத்தம் 50,135 கார்களை விற்பனை செய்துள்ளது. 2018 டிசம்பரில் அது 55,638 கார்களாக இருந்தது. ஆக, விற்பனை 9.9 சதவீதம் சரிந்துள்ளது. உள்நாட்டில் அதன் விற்பனை 37,953-ஆக குறைந்து இருக்கிறது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 42,093-ஆக இருந்தது. ஏற்றுமதி 10 சதவீதம் குறைந்து 12,182 கார்களாக உள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனை 6.91 லட்சமாக இருக்கிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.6 சதவீதம் குறைவாகும்.

Next Story