சிறப்புக் கட்டுரைகள்

மத்திய அரசில் அமலாக்க அதிகாரி வேலை - 421 காலியிடங்கள் + "||" + Enforcement officer job in central government - 421 vacancies

மத்திய அரசில் அமலாக்க அதிகாரி வேலை - 421 காலியிடங்கள்

மத்திய அரசில் அமலாக்க அதிகாரி வேலை - 421 காலியிடங்கள்
மத்திய அரசுத்துறைகளில் அமலாக்க அதிகாரி, கணக்கு அலுவலர் பணியிடங்களுக்கு 421 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் யூ.பி.எஸ்.சி. மத்திய அரசுத் துறைகளில் பல்வேறு அதிகாரி பணியிடங்களை நிரப்பும் அமைப்பாக செயல் படுகிறது. தற்போது தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் அமலாக்க அதிகாரி/கணக்கு அலுவலர் பணியிடங்களை நிரப்ப இந்த அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 421 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

இளநிலை பட்டதாரிகளுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.

கட்டணம்:

பொதுப்பிரிவினர் ரூ.25 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல், சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேர்வுகள் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 31-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். தேவையான சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்www.upsconline.nic.in, www.upsc.gov.in ஆகிய இணையதள பக்கத்தைப் பார்க்க லாம்.