மத்திய அரசு நிறுவனங்களில் 798 பயிற்சிப் பணியிடங்கள்


மத்திய அரசு நிறுவனங்களில் 798 பயிற்சிப் பணியிடங்கள்
x
தினத்தந்தி 21 Jan 2020 10:47 AM GMT (Updated: 21 Jan 2020 10:47 AM GMT)

மத்திய அரசு நிறுவனங்களில் 798 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-

பெல் 550 இடங்கள்    

பாரத மிகுமின் நிறுவனம் என்று அழைக்கப்படும் பெல் (BHEL) நிறுவனம் பல்வேறு இடங்களில் செயல்படுகிறது. தற்போது போபாலில் செயல்படும் பெல் நிறுவன கிளையில் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு 550 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிட்டர், டர்னர் , எலக்ட்ரீசியன், மெக்கானிக், கார்பெண்டர் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளில் பயிற்சிப் பணிகள் உள்ளன. இந்த பணிகளில் சேர விரும்புபவர்கள் 31-3-2020 தேதியில் 14 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 25 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வயரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

பணியிடங்கள் உள்ள பிரிவுகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் முதலில் https://ncvtmis.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் www.bhelbpl.co.in என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை நகல் எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடையும்படி அனுப்ப வேண்டும். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க ஜனவரி 31-ந் தேதி கடைசி நாளாகும். நகல் விண்ணப்பம் பிப்ரவரி 10-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும். இவை பற்றிய விவரங்களை www.bhelbpl.co. in/bplweb_new/careers/index.html என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

இந்தியன் ஆயில்    

ஐ.ஓ.சி.எல். (IOCL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 248 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியிடங்கள் தெற்குமண்டலத்தில் உள்ளன.

பிட்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், மெஷினிஸ்ட், பிட்டர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பிரிவில் பணியிடங்கள் உள்ளன. பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 30-12-2019-ந் தேதியில் 18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக ஜனவரி 27-ந்தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான எழுத்துத் தேர்வு பிப்ரவரி 9-ந் தேதியில் நடத்தப்படுகிறது. இவை பற்றிய விரிவான விவரங்களை https://www.iocl.com/PeopleCareers/Careers.aspx- என்ற இணையதள பக்கத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

Next Story