வானவில் : ஆடி கியூ 8 அறிமுகம்


வானவில் : ஆடி கியூ 8 அறிமுகம்
x
தினத்தந்தி 22 Jan 2020 9:45 AM GMT (Updated: 22 Jan 2020 9:45 AM GMT)

பிரீமியம் சொகுசு கார்களில் ஆடி தயாரிப்புகளுக்கு எப்போதுமே இடமுண்டு. இந்நிறுவனம் தனது கியூ 8 மாடல் கார்களை அறிமுகம் செய்துள்ளது.

எஸ்.யு.வி. கூபே மாடலாக வந்துள்ள இந்தக் காரின் விற்பனையக விலை சுமார் ரூ.1.33 கோடியாகும். இது முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மொத்தம் 200 கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் அறிமுகமாகும் கூபே மாடல் எஸ்.யு.வி.யில் இது முதலாவது ஆகும். முன்புற கிரில் மற்றும் எல்.இ.டி. முகப்பு விளக்கு ஆகியன இதன் தனித்தன்மைஆகும். மேற்கூரை மற்றும் பிரேம் இல்லாத கதவுகள், சக்கர வளைவுகள் ஆகியன இதன் தனித்தன்மையாகும். இதில் 3 லிட்டர் வி 6 டர்போ பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் 48 வோல்ட் மைல்ட் ஹைபிரிட் சிஸ்டமாகும். இது 340 ஹெச்.பி. திறன் மற்றும் 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டிருக்கும். இது 8 கியர்கள் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், 10.1 அங்குலதிரை மற்றும் நேவிகேஷன் வசதிகளுடன் வந்துள்ளது. ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், போர்ஷே கேய்ன் கூபே, பி.எம்.டபிள்யூ. எக்ஸ் 6 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இது இருக்கும். இவையும் இந்த ஆண்டில்தான் அறிமுகமாக உள்ளன.

Next Story