வானவில் : ரெட்மிபுக் லேப்டாப்


வானவில் : ரெட்மிபுக் லேப்டாப்
x
தினத்தந்தி 22 Jan 2020 12:15 PM GMT (Updated: 22 Jan 2020 12:15 PM GMT)

சீனாவைச் சேர்ந்த ஜியோமி நிறுவனத்தின் அங்கமான ரெட்மி பிராண்ட் சமீபத்தில் ரெட்மி புக் 13 மற்றும் ரெட்பி புக் 14 புரோ ஆகிய பெயர்களில் புதிய லேப்டாப்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

13.3 அங்குல திரையைக் கொண்டது. இதில் 1.8 கிகாஹெர்ட்ஸ் திறன் கொண்ட இன்டெல் கோர் ஐ 7 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. நினைவகம் ெ-்காண்டது. இதில் விண்டோஸ் 10 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வை-பை, புளூடூத், ஜெனரல் 1 போர்ட், ஹெச்.டி.எம்.ஐ. ஆகியன இதில் உள்ளது. 3.5 மி.மீ. ஹெட்போன், மைக்ரோபோன் ஜாக், 2 வாட் கொண்ட இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளன. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 11 மணி நேரம் தொடர்ந்து செயல்படும்.

மற்றொரு மாடலான ரெட்மிபுக் 14 புரோவில் 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. நினைவகம் உள்ளது. இது 14 அங்குல திரையைக் கொண்டுள்ளது. இதில் 1.8 கிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ 7 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 இயங்குதளம் உள்ளது. 46 வாட் பேட்டரி, விரைவாக சார்ஜ் ஆகும் வசதியோடு வந்துள்ளது.

Next Story