வானவில் : டி.சி.எல். டி.வி. மற்றும் ஏர் கண்டிஷனர்


வானவில் : டி.சி.எல். டி.வி. மற்றும் ஏர் கண்டிஷனர்
x
தினத்தந்தி 22 Jan 2020 2:41 PM GMT (Updated: 22 Jan 2020 2:41 PM GMT)

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலையில் உள்ள டி.சி.எல். நிறுவனம் புதிய ரக ஸ்மார்ட் டி.வி. மற்றும் ஏர் கண்டிஷனர்களை அறிமுகம் செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.ஐ.) அடங்கியதாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டி.வி.க்கள் வந்துள்ளன. 55 அங்குல டி.வி.யின் விலை ரூ.49,990. இதற்கு அடுத்து 65 அங்குல டி.வி.யின் விலை ரூ.69,990. ரிமோட் உதவியின்றி குரல் வழி உத்தரவின் படி இந்த டி.வி. செயல்படக் கூடியது. பார்க்கும் நிகழ்ச்சியை முன்கூட்டியே பதிவு செய்துகொள்வது, சேனல் மாற்றுவது, டி.வி.யை அணைப்பது அல்லது ஆன் செய்வது உள்ளிட்ட அனைத்தையும் குரல் வழி உத்தரவு மூலம் செயல்படுத்தலாம்.

இத்துடன் வீட்டில் பயன்படுத்தப்படும் பிற மின்னணு சாதனங்களையும் இந்த டி.வி.யின் குரல் வழி உத்தரவு மூலம் இணைந்துவிட்டால் அவற்றையும் குரல் வழி மூலம் செயல்படுத்த முடியும். இதில் ஹெச்.டி.ஆ.ர் விஷன் நுட்பம் உள்ளது. இவை அனைத்தும் 4-கே யு.ஹெச்.டி. ரெசல்யூஷனைக் கொண்டவை.

இதில் வைடு கலர் தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது. இது கண்களை உறுத்தாத வகையில் காட்சிகளை தெளிவாக வெளிப்படுத்தும். மேலும் ஆக்‌ஷன் காட்சிகளை சீராக பார்க்கும் வகையில் இதில் எம்.இ.எம்.சி. நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது. துல்லியமான தெளிவான இசைக்கு இதில் டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட் டி.வி.யில் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்கு தளம் உள்ளது. மேலும் கூகுள் பிளே, யூ-டியூப் மற்றும் பிற செயலிகளும் உள்ளன.

Next Story