வானவில் : ஏசர் போர்ட்டபிள் எல்.இ.டி. புரொஜெக்டர்


வானவில் : ஏசர் போர்ட்டபிள் எல்.இ.டி. புரொஜெக்டர்
x
தினத்தந்தி 22 Jan 2020 4:22 PM GMT (Updated: 22 Jan 2020 4:22 PM GMT)

கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஏசர் நிறுவனம் பி.250 ஐ என்ற பெயரில் புதிய எல்.இ.டி. போர்ட்டபிள் புரொஜெக்டரை அறிமுகம் செய்துள்ளது.

ஆடியோ விஷுவல் தரம் மிகச் சிறப்பானதாகவும், மிகச் சிறந்த இசை உயர் தரத்திலும் இதில் இருக்கும். இதற்கேற்ப இதில் 5 வாட் ஸ்பீக்கர் உள்ளது. இதில் ஏசர் ட்ரூ ஹார்மனி தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது. இதனால் இசை மிகத் துல்லியமாக இருக்கும். இந்த புரொஜெக்டரில் 1,000 ஏ.என்.எஸ்.ஐ. லூமென்ஸ் அளவு வெளிச்சம் பரவும். இது வயர்லெஸ் மூலமும் செயல்படும்.

இதன் புரொஜெக்டர் லென்ஸ் ஆட்டோ போகஸ் தன்மை கொண்டது. எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் குறைந்த எடையில் வந்துள்ளது. இதன் எடை 1,450 கிராம் மட்டுமே. இதை வயர்லெஸ் முறையில் செயல்படுத்த ஸ்கிரீன் மிரரிங் வசதி உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளம் உள்ளது.

இதனால் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டரிலும் இணைத்து செயல்படுத்தலாம். ஸ்மார்ட்போன் மூலமும் இதை இயக்கலாம். இப்போது தென் அமெரிக்கா மற்றும் சீனாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவிலும் இது விற்பனைக்கு வர உள்ளது. இதன் உத்தேச விலை ரூ.50 ஆயிரமாகும்.

Next Story