9 பெரிய நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் விற்பனை 9% குறைந்தது


9 பெரிய நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் விற்பனை 9% குறைந்தது
x
தினத்தந்தி 31 Jan 2020 11:24 AM GMT (Updated: 31 Jan 2020 11:24 AM GMT)

மும்பை, கொல்கத்தா, கூர்கான், நொய்டா, பூனா, ஐதராபாத், பெங்களூரு, சென்னை மற்றும் தானே ஆகியவை இந்தியாவின் 9 பெருநகரங்களாகும்.

மும்பை

இந்தியாவின் 9 பெரிய நகரங்களில், நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் விற்பனை 9 சதவீதம் குறைந்து இருக்கிறது என பிராப் ஈக்விட்டி நிறுவனம் கூறி உள்ளது.

மும்பை, கொல்கத்தா

மும்பை, கொல்கத்தா, கூர்கான், நொய்டா, பூனா, ஐதராபாத், பெங்களூரு, சென்னை மற்றும் தானே ஆகியவை இந்தியாவின் 9 பெருநகரங்களாகும். இந்த நகரங்களில் பிராப் ஈக்விட்டி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றின்படி, டிசம்பர் காலாண்டில் அடுக்குமாடி குடியிருப்புகளில் 60,453 வீடுகள் விற்பனை ஆகி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது இது 9 சதவீத சரிவாகும்.

கணக்கீட்டுக் காலத்தில் பூனாவில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் விற்பனை அதிகபட்சமாக 15,453-ஆக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 9 சதவீதம் குறைவாகும். அடுத்து தானேவில் விற்பனை 16 சதவீதம் சரிந்து 11,933-ஆக இருக்கிறது. ஜதராபாத்தில் 4,643 வீடுகளும், பெங்களூருவில் 10,263 வீடுகளும் விற்பனை ஆகி இருக்கிறது.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:-

2018 காலண்டர் ஆண்டில், அடுக்குமாடி குடியிருப்புகளில் 2.15 லட்சம் வீடுகள் விற்பனை ஆகி இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அது 7 சதவீத உயர்வாகும்.

புள்ளிவிவரங்கள்

இந்திய பெருநகரங்களில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் விற்பனை நிலவரம் குறித்து காலவாரியாக பல்வேறு நிறுவனங்களை புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகின்றன. ஆனால் இந்த புள்ளிவிவரங்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொரு நிறுவனமும் மற்றொன்றுடன் முரண்படுகிறது. எனவே இந்த விஷயத்தில் அளிக்கப்படும் புள்ளிவிவரங்கள் தற்காலிகமானவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story