சிறப்புக் கட்டுரைகள்

டிசம்பர் காலாண்டில்பஜாஜ் ஆட்டோ லாபம் 15% உயர்வு + "||" + In the December quarter Bajaj Auto profits rise 15%

டிசம்பர் காலாண்டில்பஜாஜ் ஆட்டோ லாபம் 15% உயர்வு

டிசம்பர் காலாண்டில்பஜாஜ் ஆட்டோ லாபம் 15% உயர்வு
டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் லாபம் 15 சதவீதம் உயர்ந்து ரூ.1,262 கோடியாக இருக்கிறது.
மும்பை

டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் லாபம் 15 சதவீதம் உயர்ந்து ரூ.1,262 கோடியாக இருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.1,102 கோடியாக இருந்தது.

இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 3 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.7,640 கோடியாக இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.7,436 கோடியாக இருந்தது. மொத்த லாபம் 13 சதவீதம் உயர்ந்து ரூ.1,406 கோடியாக உள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், வியாழக்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது பஜாஜ் ஆட்டோ பங்கு ரூ.3,105-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.3,184-க்கும், குறைந்தபட்சமாக ரூ.3,043.25-க்கும் சென்றது. இறுதியில் இப்பங்கு 1.48 சதவீதம் உயர்ந்து ரூ.3,137.25-ல் நிலைகொண்டது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு