சிறப்புக் கட்டுரைகள்

இந்தியன் ஆயில் லாபம் ரூ.2,339 கோடி + "||" + Indian Oil profits rise to Rs 2,339 crore

இந்தியன் ஆயில் லாபம் ரூ.2,339 கோடி

இந்தியன் ஆயில் லாபம் ரூ.2,339 கோடி
இந்தியன் ஆயில் நிறுவனம், 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.2,339 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது.
ந்தியன் ஆயில் நிறுவனம், 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.2,339 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனம் ரூ.716 கோடி லாபம் ஈட்டி இருந்தது. ஆக, லாபம் 3 மடங்கு வளர்ச்சி கண்டு இருக்கிறது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் நிகர விற்பனை 9.5 சதவீதம் குறைந்து ரூ.1.44 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், வியாழக்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது இந்தியன் ஆயில் நிறுவனப் பங்கு ரூ.120-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.120.20-க்கும், குறைந்தபட்சமாக ரூ.116.20-க்கும் சென்றது. இறுதியில் ரூ.117.15-ல் நிலைகொண்டது.