சிறப்புக் கட்டுரைகள்

நிதி நிலை முடிவுகள் + "||" + Financial position results

நிதி நிலை முடிவுகள்

நிதி நிலை முடிவுகள்
இந்திய நிறுவனங்கள் தமது அக்டோபர்-டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. முன்னணி நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் வருமாறு:-
ஐ.ஐ.எப்.எல். பைனான்ஸ் நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.193 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.108 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 78 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 2 சதவீதம் சரிந்து (ரூ.593 கோடியில் இருந்து) ரூ.582 கோடியாக குறைந்துள்ளது.

லட்சுமி மிஷின் ஒர்க்ஸ்

லட்சுமி மிஷின் ஒர்க்ஸ் நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) ரூ.6.49 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.62 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் (ரூ.661 கோடியில் இருந்து) ரூ.337 கோடியாக உயர்ந்து இருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டில், டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் இந்நிறுவனம் ரூ.38 கோடியை நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.152 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இதன் மொத்த செயல்பாட்டு வருவாய் ரூ.1,246 கோடியாக குறைந்துள்ளது.

இன்பிபீம் அவென்யூஸ்

இன்பிபீம் அவென்யூஸ் நிறுவனம், 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.25.9 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.30 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் 50 சதவீதம் சரிவடைந்து (ரூ.319 கோடியில் இருந்து) ரூ.158 கோடியாக குறைந்துள்ளது.

மகிந்திரா பைனான்ஸ்

மகிந்திரா பைனான்ஸ் நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) 16 சதவீத வளர்ச்சியுடன் ரூ.475 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.409 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 14 சதவீதம் உயர்ந்து (ரூ.2,705 கோடியில் இருந்து) ரூ.3,081 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

கணக்கீட்டுக் காலத்தில் இந்நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் 14 சதவீதம் அதிகரித்து ரூ.365 கோடியாக உள்ளது. தனிப்பட்ட வருவாய் 16 சதவீதம் வளர்ச்சி கண்டு இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள்
ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம், 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.95 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது.
2. இந்திய நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள்
இந்திய நிறுவனங்கள் தமது 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.