அழைப்பு உங்களுக்குத்தான்


அழைப்பு உங்களுக்குத்தான்
x
தினத்தந்தி 3 Feb 2020 6:30 AM GMT (Updated: 3 Feb 2020 6:30 AM GMT)

அணுசக்தி கழக நிறுவனம் சுருக்கமாக என்.பி.சி.ஐ.எல். எனப்படுகிறது. தற்போது இந்த நிறு வனத்தில் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி களுக்கு 90 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஒளிபரப்பு நிறுவனம்:
இந்திய ஒளிபரப்பு பொறியியல் நுட்ப நிறுவனம் சுருக்கமாக பி.இ.சி.ஐ.எல். எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் சர்வேயர், புரோகிராமர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 77 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டிப்ளமோ என்ஜினீயரிங், பி.இ., பி.டெக் மற்றும் கணினி அறிவியல் சார்ந்த பாடங்களை படித்து பட்டம், முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

அந்தந்த பணிகளுக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக் கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் பிப்ரவரி 17-ந் தேதியாகும். இது பற்றிய விவரங்களை
www.becil.com
என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

என்.பி.சி.ஐ.எல். :
அணுசக்தி கழக நிறுவனம் சுருக்கமாக என்.பி.சி.ஐ.எல். எனப்படுகிறது. தற்போது இந்த நிறு வனத்தில் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி களுக்கு 90 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். குறிப்பிட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் குறிப்பிட்ட உடல் தகுதியும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 14 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் வரும் பிப்ரவரி 10-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை
npcil.nic.in
என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

ஆராய்ச்சி நிறுவனம் :
மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படுகிறது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எபிடமியாலஜி நிறுவனம். சென்னை அயப்பாக்கத்தில் செயல்படும் இந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்போது புராஜெக்ட் சயின்டிஸ்ட், புராஜெக்ட் ரிசர்ச் அசிஸ்டன்ட், புராஜெக்ட் டெக்னீசியன் போன்ற பணியிடங்கள் உள்ளது. மொத்தம் 61 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணியிடங்கள் நேர்காணல் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. பிளஸ்-2 படித்தவர்கள், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்கள் என பலதரப்பட்டவா்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு நேர்காணலில் பங்கேற்கலாம்.

அப்போது தேவையான சான்றுகளை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 13-ந்தேதி வரை நேர்காணல் நடக்கிறது. எந்த நாளில் எந்த பணிக்கான நேர்காணல் நடக்கிறது என்பதை படித்து அறிந்து கொண்டு செல்லவும். இது பற்றிய விவரங்களை www.nie.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story