சிறப்புக் கட்டுரைகள்

2019 டிசம்பர் காலாண்டில் கன்டெய்னர் கார்ப்பரேஷன் லாபம் ரூ.173 கோடி + "||" + Container Corporation's profit for the quarter ended December 2019 was Rs 173 crore

2019 டிசம்பர் காலாண்டில் கன்டெய்னர் கார்ப்பரேஷன் லாபம் ரூ.173 கோடி

2019 டிசம்பர் காலாண்டில் கன்டெய்னர் கார்ப்பரேஷன் லாபம் ரூ.173 கோடி
கன்டெய்னர் கார்ப்பரேஷன் நிறுவனம், 2019 டிசம்பர் காலாண்டில் ரூ.173 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது.
 கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.276 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 35 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் (ரூ.1,740 கோடியில் இருந்து) ரூ.1,610 கோடியாக குறைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், திங்கள்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது கன்டெய்னர் கார்ப்பரேஷன் பங்கு ரூ.560.65-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.575.40- க்கு சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.572.90-ல் நிலைகொண்டது. இது, சென்ற வார இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 0.41 சதவீத இறக்கமாகும்.