முதல் மாதத்தில் புண்ணாக்கு ஏற்றுமதி 78 சதவீதம் சரிவு


முதல் மாதத்தில் புண்ணாக்கு ஏற்றுமதி 78 சதவீதம் சரிவு
x
தினத்தந்தி 11 Feb 2020 11:24 AM GMT (Updated: 11 Feb 2020 11:24 AM GMT)

நடப்பு ஆண்டின் முதல் மாதத்தில் (2020 ஜனவரி) புண்ணாக்கு ஏற்றுமதி 78 சதவீதம் சரிவடைந்து இருக்கி றது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

எண்ணெய் வித்துக்கள்

பருத்தி விதை, எள், கடுகு, சோயாபீன் உள்ளிட்ட பல்வேறு எண்ணெய் வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுத்த பிறகு கிடைக்கும் புண்ணாக்கு கால்நடை தீவனமாகவும், விளைநிலங்களில் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வியட்நாம், தென் கொரியா, தாய்லாந்து, இந்தோனேஷியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் இந்தியாவில் இருந்து புண்ணாக்கை அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன. ஐரோப்பிய நாடுகளுக்கும் கூட குறிப்பிடத் தக்க அளவிற்கு புண்ணாக்கு ஏற்றுமதி ஆகிறது.

இந்திய தாவர எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்ட தகவல்படி நடப்பு நிதி ஆண்டில் டிசம்பர் வரையிலான முதல் 9 மாதங் களில் புண்ணாக்கு ஏற்றுமதி, அளவு அடிப் படையில் 25 சதவீதம் சரி வடைந்து 18.02 லட்சம் டன்னாக இருந்தது. டிசம்பர் மாதத்தில் மட்டும் 67,562 டன் புண்ணாக்கு ஏற்றுமதியானது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது 3.25 லட்சம் டன்னாக இருந்தது. ஆக, ஏற்றுமதி 79 சதவீதம் குறைந்து இருந்தது.

இந்நிலையில், நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 51,393 டன் புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 2,36,213 டன்னாக இருந்தது. ஆக, ஏற்றுமதி 78 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த 2018-19-நிதி ஆண்டில் அளவு அடிப் படையில் புண்ணாக்கு ஏற்று மதி 6 சதவீதம் உயர்ந்து 32 லட்சம் டன்னாக இருந்தது. அதன் மதிப்பு ரூ.6,222 கோடியாகும். ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி 31 சதவீதம் உயர்ந்து இருந்ததது.

சோயாபீன்

உலக அளவில், சோயாபீன் உற்பத்தியில் நம் நாடு ஐந்தாவது இடத்தில் இருந்து வருகிறது. ஆசிய நாடுகளில் சோயா புண்ணாக்கு ஏற்றுமதியில் இந்தியா முன்னிலையில் உள்ளது. நமது ஒட்டுமொத்த புண்ணாக்கு ஏற்றுமதியில் சோயாவின் பங்கு அதிகமாக உள்ளது. சோயா புண்ணாக்கு ஏற்றுமதியில் மத்தியபிரதேச மாநிலம் முன்னணியில் இருக்கிறது.

Next Story