சிறப்புக் கட்டுரைகள்

டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில்ஏ.சி.சி. நிகர லாபம் ரூ.273 கோடி + "||" + In the quarter ended December ACC Net profit Rs.273 crores

டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில்ஏ.சி.சி. நிகர லாபம் ரூ.273 கோடி

டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில்ஏ.சி.சி. நிகர லாபம் ரூ.273 கோடி
ஏ.சி.சி. நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் (2019) ரூ.273 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது.
புதுடெல்லி

ஏ.சி.சி. நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் (2019) ரூ.273 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.232 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 25 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் 5 சதவீதம் உயர்ந்து ரூ.3,970 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, பங்குதாரர்களுக்காக ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்குக்கு ரூ.14 டிவிடெண்டு வழங்க பரிந்துரை செய்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், திங்கள்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது ஏ.சி.சி. நிறுவனப் பங்கு ரூ.1499-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே குறைந்தபட்சமாக ரூ.1447.70-க்கு சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.1451.15-ல் நிலைகொண்டது. இது, கடந்த வார இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 3.34 சதவீத சரிவாகும்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு