சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : ஐ.கியூ. ஏர் ஹெல்த் புரோ ‘250’ ஏர் பியூரிபயர் + "||" + Vanavil : A.Q. Air Health Pro 250 Code Air Purifier

வானவில் : ஐ.கியூ. ஏர் ஹெல்த் புரோ ‘250’ ஏர் பியூரிபயர்

வானவில் : ஐ.கியூ. ஏர் ஹெல்த் புரோ ‘250’ ஏர் பியூரிபயர்
சுகாதாரமான காற்றை சுவாசிக்க அதிக விலை கொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது.
இன்றைய நகர்ப்புற வாழ்க்கை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. பெருகி வரும் வாகனங்களால் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கெல்லாம் மேலாக இப்போது காற்றில் பரவிவரும் வைரஸ் தொற்று மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து உள்ளது. 

இத்தகைய சூழலில் சுகாதாரமான காற்றை சுவாசிக்க அதிக விலை கொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது. காற்று மாசுவினால் ஏற்படும் சுகாதாரக் கேடுகளால் மருத்துவமனைக்கு செலவழித்து உடல் உபாதைகளால் அவதிப்படுவதை விட முன்னெச்சரிக்கையாக காற்று சுத்திகரிப்பானை வீடுகளில் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.

ஏ.சி., ரெபரிஜிரேட்டர் போன்று தற்போது ஏர் பியூரிபயரும் அவசியமானதாகி வருகிறது. காற்று சுத்திகரிப்பானில் பிரீமியம் தயாரிப்புகளை உருவாக்கும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஐ.கியூ. ஏர் ஹெல்த்புரோ நிறுவனம் ‘250’ என்ற பெயரிலான ஏர் பியூரிபயரை அறிமுகம் செய்துள்ளது. இது காற்றில் கலந்திருக்கும் நைட்ரஜன் டை ஆக்ஸைடு, ரசாயன வாயுக்கள், ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள், செல்லப் பிராணிகளால் பரவும் பொடுகு, கரையான் உள்ளிட்டவற்றையும் வடிகட்டி விடும்.

இதில் மூன்று நிலைகளில் காற்றை வடிகட்டும் அமைப்பு உள்ளது. இதனால் உடலுக்கு ஊறு விளைவிக்கும் பொருட்களை இது நீக்கிவிடும். காற்றில் கலந்துள்ள மாசுக்களை 99.5 சதவீத அளவுக்கு வடிகட்டிவிடும் திறனும் கொண்டது. இது 0.003 மைக்ரான் அளவுக்கு நுண்ணிய தூசியையும் வடிகட்டிவிடும். இது செயல்படும்போது குறைவான சப்தமே ஏற்படும். இதனால் தூக்கம் பாதிக்காது. 20 வாட் மின்சாரத்தில் செயல்படும். இதிலுள்ள மின்விசிறி 135 வாட் திறன் கொண்டது.

இதில் உள்ள பேன் சுழற்சியை கட்டுப்படுத்த 6 நிலைகள் உள்ளன. இதை தேவைக்கேற்ப நிர்ணயித்துக் கொள்ளலாம். துல்லியமாக காற்றை வடிகட்டி சுகாதாரமாக வாழவழி வகுக்கும் இந்த ஏர் பியூரிபயர் விலை சுமார் ரூ.1.40 லட்சமாகும்.