நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் சிறிய, நடுத்தர துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 4.8% அதிகரிப்பு


நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் சிறிய, நடுத்தர துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 4.8% அதிகரிப்பு
x
தினத்தந்தி 12 Feb 2020 9:39 AM GMT (Updated: 12 Feb 2020 9:39 AM GMT)

நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் (2019 ஏப்ரல்-டிசம்பர்) சிறிய மற்றும் நடுத்தர துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 4.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

புதுடெல்லி

நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் (2019 ஏப்ரல்-டிசம்பர்) சிறிய மற்றும் நடுத்தர துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 4.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

12 பெரிய துறைமுகங்கள்

இந்தியாவின் நீண்ட கடற்கரையில் 12 பெரிய துறைமுகங்களும், 187 சிறிய மற்றும் நடுத்தர துறைமுகங்களும் உள்ளன. இதில் கண்ட்லா, மும்பை, ஜே.என்.பி.டி., மர்ம கோவா, புதிய மங்களூரு, கொச்சி, சென்னை, எண்ணூர், தூத்துக்குடி, விசாகப்பட்டினம், பரதீப், கொல்கத்தா (ஹால்டியா உள்பட) ஆகிய 12 பெரிய துறைமுகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற சிறிய மற்றும் நடுத்தர துறைமுகங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில், டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் இந்த 12 துறைமுகங்கள் 52.40 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளன. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் அது 51.89 கோடி டன்னாக இருந்தது. ஆக, பெரிய துறைமுகங்கள் கையாண்ட சரக்கு 0.98 சதவீதம் மட்டும் அதிகரித்து இருக்கிறது.

கணக்கீட்டுக் காலத்தில் சிறிய மற்றும் நடுத்தர துறைமுகங்கள் மொத்தம் 44.72 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளன. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 4.8 சதவீதம் அதிகமாகும். அப்போது அது 42.65 கோடி டன்னாக இருந்தது.

61 சதவீத பங்கு

நாட்டின் மொத்த ஏற்றுமதி, இறக்குமதியில் 12 பெரிய துறைமுகங்கள் 61 சதவீத பங்கினைக் கொண்டுள்ளன. இந்த துறைமுகங்களில் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சரக்குகள் கையாளும் திறனும் அதிகரித்து வருகிறது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story