சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : பென்கியூ புரொஜெக்டர் + "||" + Vanavil : BenQ Projector

வானவில் : பென்கியூ புரொஜெக்டர்

வானவில் : பென்கியூ புரொஜெக்டர்
மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பென் கியூ நிறுவனம் நவீன புரொஜெக்டரை டி.கே 850 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
4-கே ரெசல்யூஷனை மிக துல்லியமாக பதிவிடும் புரொஜெக்டராகும். இது வெளிச்சம் மிகுந்த அறைகளிலும் காட்சிகள் தத்ரூபமாகவும், தரத்துடனும் காண முடியும். வீடுகளில் சினிமா படங்கள் பார்ப்பதற்கும், விளையாட்டு போட்டிகளை கண்டு களிப்பதற்கும் ஏற்றது.

இதில் 3,000 லுமென்ஸ் உள்ளதால் வண்ணங்கள் மிக துல்லியமாக வெளிப்படும். விளையாட்டு நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது அதற்கென பிரத்யேகமாக உள்ள ‘விளையாட்டு மோட்’ பொத்தானை அழுத்தினால் காட்சிகள் மேலும் துல்லியமாக தெரியும்.

இதனுள் 10 வாட் ஆடியோ சிஸ்டம் இருப்பதால் விளையாட்டு காட்சிகளில் அறிவிப்பாளரின் குரல் துல்லியமாக கேட்கும். மேற்கூரை பகுதியில் இதை நிறுவி செயல்படுத்த முடியும். இதற்கு சாதாரண புரொஜெக்டர் திரை இருந்தால் போதுமானது. இதன் விலை சுமார் ரூ.1.22 லட்சமாகும்.