2019 டிசம்பர் காலாண்டில் பஞ்சாப் & சிந்த் வங்கி இழப்பு ரூ.255 கோடி


2019 டிசம்பர் காலாண்டில் பஞ்சாப் & சிந்த் வங்கி இழப்பு ரூ.255 கோடி
x
தினத்தந்தி 12 Feb 2020 9:54 AM GMT (Updated: 12 Feb 2020 9:54 AM GMT)

பொதுத்துறையைச் சேர்ந்த பஞ்சாப் & சிந்த் வங்கி, 2019 டிசம்பர் காலாண்டில் ரூ.255 கோடியை நிகர இழப்பாகக் கண்டுள்ளது.

மும்பை

பொதுத்துறையைச் சேர்ந்த பஞ்சாப் & சிந்த் வங்கி, 2019 டிசம்பர் காலாண்டில் ரூ.255 கோடியை நிகர இழப்பாகக் கண்டுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் இவ்வங்கி ரூ.22 கோடி லாபம் ஈட்டி இருந்தது. இதே காலத்தில் இவ்வங்கியின் மொத்த வருவாய் (ரூ.2,337 கோடியில் இருந்து) கோடியாக ரூ.2,077 கோடியாக குறைந்துள்ளது. மொத்த வாராக்கடன் (11.19 சதவீதத்தில் இருந்து) 13.58 சதவீதமாக அதிகரித்துள்ளது. நிகர வாராக்கடன் (6.90 சதவீதத்தில் இருந்து) 8.71 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.

மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது பஞ்சாப் சிந்த் வங்கிப் பங்கு ரூ.18-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.18.50-க்கும், குறைந்தபட்சமாக ரூ.17.50-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.17.90-ல் நிலைகொண்டது. இது, முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 2.98 சதவீத சரிவாகும்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story