சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : ஜியோமியின் ஸ்மார்ட் விளக்கு + "||" + Vanavil : xiaomi smart lamp

வானவில் : ஜியோமியின் ஸ்மார்ட் விளக்கு

வானவில் : ஜியோமியின் ஸ்மார்ட் விளக்கு
சீனாவின் ஜியோமி நிறுவனம் புதிய ஸ்மார்ட் விளக்கை அறிமுகம் செய்துள்ளது. ‘ஹெச்’ வடிவிலான இந்த விளக்கு பல்வேறு மருத்துவ அம்சங்களை உள்ளடக்கியது.
சுகாதாரத்திற்கு வித்திடும் செயல்பாடுகளை கொண்டது. இதன் விலை சுமார் ரூ.1,500 ஆகும். ஆங்கில எழுத்து ‘ஹெச்’ போன்ற தோற்றத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பாக்டீரியாவைக் கொல்லும் அகச்சிவப்பு கதிர்களைக் கொண்டது. 35 வாட் செயல்திறன் கொண்ட இது 9 ஆயிரம் மணி நேரம் ஒளி வீசக்கூடியது.

இதிலிருந்து வெளியாகும் அகச்சிவப்பு கதிரின்திறன் 20 மீட்டர் முதல் 30 மீட்டர் வரை சுற்று வட்டாரத்துக்கு பரவக்கூடியது. இது மருத்துவர்களால் அனுமதிக்கப்பட்ட அளவாகும்.

மேலும் இதில் உள்ள விளக்கின் வெளிச்சத்தை இதற்கான செயலி மூலம் கட்டுப்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் செயல்படும் ஸ்மார்ட்போன் மூலமும் இதை செயல்படுத்த முடியும்.