சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : பிங்கர்ஸ் சூப்பர்லிட் புளூடூத் ஸ்பீக்கர் + "||" + Vanavil :Pinkers SuperLid Bluetooth Speaker

வானவில் : பிங்கர்ஸ் சூப்பர்லிட் புளூடூத் ஸ்பீக்கர்

வானவில் : பிங்கர்ஸ் சூப்பர்லிட் புளூடூத் ஸ்பீக்கர்
மின்னணு கருவிகள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் பிங்கர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிடங்களுக்கு எளிதில் எடுத்துச் செல்ல வசதியாக புளூடூத் ஸ்பீக்கர்களை சூப்பர் லிட் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
ஸ்பீக்கருக்கு புளூடூத் 5.0 இணைப்பு உள்ளது. இதில் டி.டபிள்யூ.எஸ். தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 10 வாட் ஸ்பீக்கர்கள் மிகவும் துல்லியமான இசையை வழங்கும். புளூடூத் இணைப்பு மூலம் பண்பலை வானொலியை இணைக்க முடியும். மைக்ரோ எஸ்.டி. கார்டு வசதி உள்ளது.

இதன் மேல் பகுதியில் இதை இயக்குவதற்கான பொத்தான்களும் உள்ளன. இதன் மேல்பகுதியில் ஒளிரும் ஆர்.ஜி.பி. விளக்குகள் இதிலிருந்து வெளியாகும் இசைக்கேற்ப எரியும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள டி.டபிள்யூ.எஸ். தொழில்நுட்பமானது இசை மற்றும் ஒளியின் அளவை ஒருங்கிணைத்து ரம்மியமான சூழலை உருவாக்க உதவும். இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 9 மணி நேரம் தொடர்ந்து செயல்படும். இதில் 2,000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.2,299 ஆகும். 

தொடர்புடைய செய்திகள்

1. வானவில் :மோரர் ஓவியம் கொண்ட புளூடூத் ஸ்பீக்கர்
ஜியோமி நிறுவனம் கண்ணாடியில் வரையப்பட்ட ஓவியம் கொண்ட புளூடூத் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. ஸ்பீக்கரை வெளியிலிருந்து பார்க்கும்போது உள்ளிருக்கும் பாகங்கள் தெளிவாகத் தெரியும்.