சிறப்புக் கட்டுரைகள்

வானவில் :சவுண்ட் கோர் வழங்கும் ஏஸ் .ஏஓ. ஸ்பீக்கர் + "||" + Vanavil : Sound Core Provided AS AO Speaker

வானவில் :சவுண்ட் கோர் வழங்கும் ஏஸ் .ஏஓ. ஸ்பீக்கர்

வானவில் :சவுண்ட் கோர் வழங்கும் ஏஸ் .ஏஓ. ஸ்பீக்கர்
ஆங்கர் நிறுவனத்தின் அங்கமான சவுண்ட்கோர் நிறுவனம் ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனம் ஏஸ்.ஏஓ. என்ற பெயரில் புதிய ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது.
வீட்டிலும், வெளியிடங்களிலும் பயன்படுத்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு டோனெட் வடிவில் உள்ளது. 

சிறிய அளவில் இருப்பதால் இதை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்வதும் எளிது. இதன் எடை 64 கிராம் மட்டுமே. 

ஒரு பொத்தானில் அனைத்து விதமான செயல்பாடுகளும் உள்ளன. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 4 மணி நேரம் செயல்படும். இதன் விலை சுமார் ரூ. 1,699.