சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : போர்ட்ரானிக்ஸ் ஹார்மோனிக்ஸ் டுவின்ஸ் + "||" + Vanavil : Portronix Harmonix Twins

வானவில் : போர்ட்ரானிக்ஸ் ஹார்மோனிக்ஸ் டுவின்ஸ்

வானவில் : போர்ட்ரானிக்ஸ் ஹார்மோனிக்ஸ் டுவின்ஸ்
ஆடியோ சார்ந்த மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் பிரபலமாகத் திகழ்கிறது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம்.
ஆடியோ சார்ந்த மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் பிரபலமாகத் திகழும் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் வயர்லெஸ் ஆடியோ சாதனங்கள் வரிசையில் புதிதாக ஹார்மோனிக்ஸ் டுவின்ஸ் 2 என்ற புதிய இயர்பட்டை அறிமுகம் செய்து உள்ளது. இது இந்த வரிசையில் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்ததாகும்.

சாம்சங் கேலக்ஸி ஏர்பட் வடிவமைப்பை போன்றே இது தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏர்பட் நீண்ட குச்சி போன்ற (ஸ்டிக்) கொண்டதாகவும் காதுகளில் சரியாக பொருந்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது எடை குறைவானதாகும். நீர் மற்றும் வியர்வையால் பாதிக்கப்படாத வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளதால் உடற்பயிற்சியின்போதும் இதை பயன்படுத்த முடியும். இதில் புளூடூத் 5.0 வயர்லெஸ் இணைப்புக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 40 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சார்ஜிங் கேஸில் 380 எம்.ஏ.ஹெச். லித்தியம் பாலிமர் பேட்டரி உள்ளது.

இதனால் தொடர்ந்து 12 மணி நேரம் இது செயல்படும். ஏர்பட்டின் மேல் பகுதியில் இதன் கட்டுப்பாட்டு பொத்தான் உள்ளது. இதில் உள்ளடாக மைக் உள்ளதால் வாய்ஸ் அசிஸ்டென்ட் மூலமும் இதை செயல்படுத்தலாம். இதில் எதிரொலி குறைப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகள் துல்லியமாகக் கேட்கும், நீங்கள் பதிலும் அளிக்கலாம். கருப்பு நிறத்தில் விற்பனைக்கு வந்துள்ள இதன் விலை சுமார் ரூ.2,499.