சிறப்புக் கட்டுரைகள்

மூன்றாவது காலாண்டில்டாட்டா ஸ்டீல் இழப்பு ரூ.1,229 கோடி + "||" + In the third quarter Tata Steel loses Rs 1,229 crore

மூன்றாவது காலாண்டில்டாட்டா ஸ்டீல் இழப்பு ரூ.1,229 கோடி

மூன்றாவது காலாண்டில்டாட்டா ஸ்டீல் இழப்பு ரூ.1,229 கோடி
டாட்டா ஸ்டீல் நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) ரூ.1,229 கோடியை ஒட்டுமொத்த நிகர இழப்பாகக் கண்டுள்ளது.
மும்பை

டாட்டா ஸ்டீல் நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) ரூ.1,229 கோடியை ஒட்டுமொத்த நிகர இழப்பாகக் கண்டுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனம் ரூ.1,753 கோடி லாபம் ஈட்டி இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 9 சதவீதம் சரிவடைந்து ரூ.35,520 கோடியாக இருக்கிறது. ஒட்டுமொத்த லாபம் 46 சதவீதம் சரிந்து (ரூ.6,726 கோடியில் இருந்து) ரூ.3,659 கோடியாக குறைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது டாட்டா ஸ்டீல் பங்கு ரூ.446.25-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.457.15-க்கும், குறைந்தபட்சமாக ரூ.442.85-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.444.25-ல் நிலைகொண்டது. இது, திங்கள்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 0.14 சதவீத ஏற்றமாகும்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு