சிறப்புக் கட்டுரைகள்

வானவில் : பஜாஜ் சி.டி 100, பிளாட்டினா 100 + "||" + Vanavil : Bajaj CD 100, Platina 100

வானவில் : பஜாஜ் சி.டி 100, பிளாட்டினா 100

வானவில் : பஜாஜ் சி.டி 100, பிளாட்டினா 100
இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணி இந்திய நிறுவனமான பஜாஜ் தனது பிரபலமான மாடல்களான சி.டி 100 மற்றும் பிளாட்டினா 100 மோட்டார் சைக்கிள்களை பி.எஸ் 6 தரத்துக்கு உயர்த்தி அறிமுகப்படுத்தியுள்ளது.
மேம்படுத்தப்பட்ட பஜாஜ் சி.டி 100 மாடல் விற்பனையக விலை சுமார் ரூ.40,794 ஆகும். முந்தைய மாடலின் விலை ரூ.33,402 ஆக இருந்தது. இதேபோல பிளாட்டினா 100 மாடல் விலை சுமார் ரூ.47,264 ஆகும். இதில் செல்ப் ஸ்டார்ட் மாடல் விலை சுமார் ரூ.54,797. பாரத் புகை விதி 6-ன் படி தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் விலை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை அதிகமாகும்.

பி.எஸ் 6 தரம் உயர்த்தப்பட்ட இவ்விரு மாடல்களிலும் பியூயல் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பம் பின்பற்றப்பட்டுள்ளது. அதேபோல இதன் எக்ஸாஸ்ட் வடிவமைப்பும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெருமளவு மாற்றங்கள் இன்றி இவை இரண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆசிரியரின் தேர்வுகள்...