சிறப்புக் கட்டுரைகள்

வானவில் :பி.எஸ் 6 தரத்தில் ஹோண்டா அமேஸ் + "||" + Vanavil : Honda Ames on PS6 standard

வானவில் :பி.எஸ் 6 தரத்தில் ஹோண்டா அமேஸ்

வானவில் :பி.எஸ் 6 தரத்தில் ஹோண்டா அமேஸ்
ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா நிறுவனம் அமேஸ் மாடல் காரை பி.எஸ் 6 தரத்துக்கு தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. செடான் பிரிவில் இந்த காருக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இதைத் தொடர்ந்து இதில் பெட்ரோல், டீசல் மாடலை பி.எஸ் 6 தரத்தில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
1.5 லிட்டர் ஐ.டி.டி.இ.சி. என்ஜினைக் கொண்டது. டீசல் மாடலுக்கு டி.பி.எப். வடிகட்டி பயன்படுத்தப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடல் 1.2 லிட்டர் ஐ.வி.டெக் என்ஜினைக் கொண்டு உள்ளது.

இதில் மானுவல் டிரான்ஸ்மிஷன் கியர் மற்றும் ஆட்டோமேடிக் கியர் மாற்றும் வசதிகளைக் கொண்டு வந்துள்ளது. பெட்ரோல் மாடல் 90 பி.எஸ். திறனும் 110 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையும் கொண்டது. டீசல் மாடல் 100 பி.எஸ். திறனும் 200 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையும் கொண்டது.

பெட்ரோல் மாடல் சுமார் ரூ.6.09 லட்சத்தில் தொடங்கி பிரீமியம் மாடல் விலை சுமார் ரூ.8.75 லட்சம் வரை உள்ளது. டீசல் மாடல் விலை சுமார் ரூ.7.55 லட்சம் முதல் ரூ.9.95 லட்சம் வரை உள்ளது.