வானவில்: தொழில்நுட்பம் அதிகம் கொண்ட ஸ்டைலான எஸ்.யு.வி.யை அறிமுகப்படுத்துகிறது நிசான்


வானவில்: தொழில்நுட்பம் அதிகம் கொண்ட ஸ்டைலான எஸ்.யு.வி.யை அறிமுகப்படுத்துகிறது நிசான்
x
தினத்தந்தி 12 Feb 2020 12:12 PM GMT (Updated: 12 Feb 2020 12:12 PM GMT)

கார் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள ஜப்பானைச் சேர்ந்த நிசான் நிறுவனம் அதிக தொழில்நுட்பம் நிறைந்த ஸ்டைலான எஸ்.யு.வி. மாடல் காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

கார் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள ஜப்பானைச் சேர்ந்த நிசான் நிறுவனம் அதிக தொழில்நுட்பம் நிறைந்த ஸ்டைலான எஸ்.யு.வி. மாடல் காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்திய சாலைகளுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது இந்த எஸ்.யு.வி. இந்தியாவில் தயார் செய்யப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் நிசான் திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் நிசான் தயாரிப்புகளுக்கு இருக்கும் வரவேற்பு மற்றும் பிரசித்தி பெற்ற மாடல் வடிவமைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இப்புதிய ரக கார் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இதில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை புகுத்தவும் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சொகுசான, பாதுகாப்பான பயணத்தை அளிக்கும் விதமாக அதற்கு உதவியாக உள்ள நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தையும் இதில் புகுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மிகவும் நவீன தொழில்நுட்பத்தை தனது தயாரிப்புகளில் புகுத்த வேண்டும் என்ற இந்நிறுவனத்தின் கொள்கைகளுக்கேற்ப இது உருவாக்கப்பட்டு வருகிறது. ஜப்பானிய தொழில்நுட்பங்களின் சிறப்பை உலகுக்கு அறிவிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்கள் அனைத்தும் இப்புதிய காரில் இடம்பெறும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான பேட்ரோல், பாத்பைண்டர், அர்மடா, எக்ஸ்டிரெய்ல், ஜூக், குவாஷ்கய் மற்றும் கிக்ஸ் ஆகிய மாடல்கள் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. அதேபோல மேம்பட்ட தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக இப்புதிய கார் நிச்சயம் இருக்கும் என்று நிசான் அறிவித்துள்ளது.

நிசான் நிறுவனம் சர்வதேச அளவில் 60 மாடல்களில் நிசான், இன்பினிடி, டட்சன் ஆகிய பிராண்டு பெயர்களில் அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது. சுற்றுச் சூழலில் அதிக அக்கறை செலுத்தி வரும் நிறுவனம் பேட்டரி கார் தயாரிப்பிலும் முன்னோடியாகத் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் நிசான் லீப் மாடல் கார் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றதாகும்.

Next Story