வானவில்: ஹூயாவெய் மேட் புக் லேப்டாப்கள்


வானவில்: ஹூயாவெய் மேட் புக் லேப்டாப்கள்
x
தினத்தந்தி 12 Feb 2020 12:19 PM GMT (Updated: 12 Feb 2020 12:19 PM GMT)

ஹூயாவெய் நிறுவனம் மேட்புக் டி 14 மற்றும் மேட்புக் டி 15 என்ற பெயரிலான லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது.

மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமான ஹூயாவெய் நிறுவனம் மேட்புக் டி 14 மற்றும் மேட்புக் டி 15 என்ற பெயரிலான லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு லேப்டாப்களுமே விண்டோஸ் 10 இயங்குதளத்தில் செயல்படக் கூடியவையாகும்.

மேட்புக் டி 15 மாடலின் திரை 15.6 அங்குலமாகும். அதேபோல டி 14 மாடலின் திரை 14 அங்குல அளவில் உள்ளது. இவை இரண்டிலுமே 12 என்.எம். ஏ.எம்.டி. ரிஸென் 5 3500 யு பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஏ.எம்.டி. ரேடியோன் வேகா 8 கிராபிக்ஸ் வசதி உள்ளது. இரண்டுமே 8 ஜி.பி. ரேம் கொண்டவை. இவற்றில் முறையே 512 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. நினைவக வசதி உள்ளது. சிறப்பாக செயல்பட வசதியாக அதாவது லேப்டாப் சூடாவதைத் தவிர்க்க இதில் ஷார்க் பின் அமைப்பிலான இரண்டு கூலிங் பேன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இவை மிகச் சிறப்பாக செயலாற்றும்.

மேட்புக் டி 15 மாடலில் 42 வாட் பேட்டரியும், டி 14 மாடலில் 56 வாட் பேட்டரியும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு 65 வாட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளன. விரைவாக சார்ஜ் ஆக டைப் சி சார்ஜரும் உள்ளது. இவற்றில் யு.எஸ்.பி. 3.0 டைப் ஏ போர்ட், யு.எஸ்.பி. டைப் 2.0 போர்ட் மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் உள்ளன.

இத்துடன் 3.5 மி.மீ. அளவிலான ஹெட்போன் ஜாக் வசதியும் உள்ளன. இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாடல் லேப்டாப்கள் விரைவிலேயே இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று தெரிகிறது.

Next Story