சிறப்புக் கட்டுரைகள்

வானவில்: லாஜிடெக்கின் ‘எர்கோ கே 860’ கீ போர்ட் + "||" + Logitech's Erco k860key Board

வானவில்: லாஜிடெக்கின் ‘எர்கோ கே 860’ கீ போர்ட்

வானவில்: லாஜிடெக்கின் ‘எர்கோ கே 860’ கீ போர்ட்
லாஜிடெக் நிறுவனம் தற்போது எர்கோனாமிக் வடிவமைப்பில் புதிய ரக கம்ப்யூட்டர் கீபோர்டை அறிமுகம் செய்துள்ளது.
ம்ப்யூட்டர் சார்ந்த உதிரி பாகங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் லாஜிடெக் நிறுவனம் தற்போது எர்கோனாமிக் வடிவமைப்பில் புதிய ரக கம்ப்யூட்டர் கீபோர்டை அறிமுகம் செய்துள்ளது. லாஜிடெக் ‘எர்கோ கே 860’ என்ற பெயரில் இது விற்பனைக்கு வந்துள்ளது. வழக்கமான கீ போர்டில் பொத்தான்கள் அருகருகே அமைந்து தகவல்களை டைப் செய்வதில் தவறு ஏற்பட வழிவகுக்கிறது. அத்துடன் இது சிரமமாகவும் உள்ளது.

இந்நிறுவனத்தின் கீ போர்டில் அதிக இடைவெளி விட்டு இரண்டு கை விரல்களையும் தனித்தனியே செயல்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைத்துள்ளது. எழுத்துகளுக்கான பொத்தான்கள் அதிக இடைவெளியில் இருப்பதால் சிரமம் குறைகிறது.

இதன் காரணமாக மணிக்கட்டுக்கான அழுத்தம் 54 சதவீதம் குறைவதாக இந் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் தசைகளுக்கான செயல்பாடு 21 சதவீதம் குறைவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கீ போர்டில் உள்ள பொத்தான்கள் இரண்டு சம எண்ணிக்கையில் பிரிக்கப்பட்டுள்ளன. நடுவில் முக்கோண வடிவிலான இடை வெளி தரப்பட்டுள்ளது. வளைவாக அமைக்கப்பட்டுள்ளதால் கைவிரல்கள், மணிக்கட்டு உள்ளிட்டவற்றுக்கு சிரமம் குறைகிறது.

அதேபோல மணிக்கட்டு வைப்பதற்கான பகுதியில் மிருதுவான போம் உள்ளது. இது மணிக்கட்டு பகுதியின் சிரமத்தைக் குறைக்கிறது. இது முழு அளவிலான கீ போர்டாகும். இதிலேயே நம்பர் பேட், கர்சர் கீ, சிறப்பு பொத்தான்களும் உள்ளன. முழு அளவிலான கீ போர்டை பயன்படுத்துவோர் இதில் உள்ள சவுகரியங்களை நன்கு உணர முடியும். பொத்தான்களுக்கு இடையே போதிய இடைவெளி இருப்பதால் தகவல்கள் சரியாக பதிவாகும், பிழைகள் குறையும்.

இது புளூடூத் 5.0 இணைப்பு உள்ள கீ போர்டாகும். இதனால் கம்ப்யூட்டருடன் இணைப்பை ஏற்படுத்தி செயல்படுத்த முடியும். இத்துடன் 2.4 கிகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட வை-பை டாங்கிளுடன் வருகிறது. இதனுடன் வரும் மவுஸ் இரண்டு ஏ ஏ பேட்டரியில் இயங்கும். இதன் விலை சுமார் ரூ.9,500.