சிறப்புக் கட்டுரைகள்

வானவில்: அமேசான் எக்கோ ஷோ 8 + "||" + Amazon Echo Show 8

வானவில்: அமேசான் எக்கோ ஷோ 8

வானவில்: அமேசான் எக்கோ ஷோ 8
அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மின்னணு சாதனங்களையும் தயாரிக்கிறது.
மெரிக்காவைச் சேர்ந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மின்னணு சாதனங்களையும் தயாரிக்கிறது. இந்நிறுவனத் தயாரிப்பில் அமேசான் அலெக்ஸா மிகவும் பிரபலமானது. தற்போது எக்கோ மாடலையும் இந்நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இதில் மேம்பட்ட ரகமாக எக்கோ ஷோ 8 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.8,999 ஆகும். இதில் 8 அங்குல ஹெச்.டி. டிஸ்பிளே திரையைக் கொண்டுள்ளது.

அலெக்ஸா மூலமான கேள்விகளுக்கு இதில் பதில் பெறலாம். ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதிலைப் பெறும் வசதி கொண்டது. இதனால் உங்களுக்கு விருப்பமான டி.வி. நிகழ்ச்சி, திரைப்படம், இசை, வானிலை நிலவரம், தற்போதைய செய்தி உள்ளிட்டவற்றை அலெக்ஸாவில் கேட்டு இதில் காட்சிகளாக, இசையாக கேட்டு மகிழலாம். வீட்டில் உபயோகிக்கும் நவீன மின்னணு சாதனங்களையும் இத்துடன் இணைத்து செயல்படுத்த முடியும். வீடியோ அழைப்புகள், குரல் வழி அழைப்புகளையும் இதன் மூலம் மேற்கொள்ளலாம். குறுந்தகவலையும் அனுப்பலாம். வீட்டில் உள்ள பிற எக்கோ சாதனங்களையும் இதனுடன் இணைத்துக் கொள்ளலாம்.

அமேசான் பிரைம் மியூசிக், ஆப்பிள் மியூசிக், ஜியோசாவ்ன், கானா, ஹங்கமா உள்ளிட்ட பிற தளங்களிலிருந்தும் நிகழ்ச்சிகளை இதில் பார்க்கலாம். வீட்டில் பயன்படுத்தும் ஸ்மார்ட் உபகரணங்களான ஸ்மார்ட் லைட், பாதுகாப்பு கேமரா, சுவிட்ச்கள், கெய்சர், ஏ.சி. உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளையும் இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

இதில் 4 மைக்ரோபோன்கள் மற்றும் முன்புறம் ஒரு கேமரா உள்ளது. அனைத்து செயல்பாடுகளையும் ஒரு பொத்தானில் செயல்படுத்த முடியும். இதில் உள்ள கேமராவுக்கு ஷட்டரும் உள்ளது. இது தவிர தனி நபர் பாதுகாப்புக்காக இதில் தினசரி பார்வையிட்ட தளங்கள் பற்றிய விவரங்களை அலெக்ஸா மூலமாக நீக்கிவிடும் வசதியும் உள்ளது.

இதில் மீடியா டெக் எம்.டி 8163 பிராசஸர் உள்ளது. இது தவிர வை-பை, புளூடூத் ஆகியவற்றுடன் 2 அங்குல நியோடிமியம் ஸ்பீக்கர்களும் உள்ளன. கருப்பு, வெள்ளை நிறங்களில் இது இம்மாதம் 26-ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...