சிறப்புக் கட்டுரைகள்

எம்.ஆர்.எப். லாபம் 17 சதவீதம் சரிந்தது + "||" + MRF. Profits fell 17 percent

எம்.ஆர்.எப். லாபம் 17 சதவீதம் சரிந்தது

எம்.ஆர்.எப். லாபம் 17 சதவீதம் சரிந்தது
எம்.ஆர்.எப். நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் (2019) ரூ.241 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது.
எம்.ஆர்.எப். நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் (2019) ரூ.241 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி இருக்கிறது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.291 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 17 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் (ரூ.4,221 கோடியில் இருந்து) ரூ.4,150 கோடியாக குறைந்துள்ளது.

இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு பங்கு ஒன்றுக்கு ரூ.3-ஐ (30 சதவீதம்) இரண்டாவது இடைக்கால டிவிடெண்டாக அறிவித்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது எம்.ஆர்.எப். நிறுவனப் பங்கு ரூ.71,698.90-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.72,017.35-க்கும், குறைந்தபட்சமாக ரூ.71,500-க்கும் சென்றது. இறுதியில் ரூ.71,629.25-ல் நிலைகொண்டது. இது, செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 0.32 சதவீத ஏற்றமாகும்.