ஐ.டீ.பீ.ஐ. வங்கியின் இழப்பு அதிகரிப்பு


ஐ.டீ.பீ.ஐ. வங்கியின் இழப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 13 Feb 2020 11:17 AM GMT (Updated: 13 Feb 2020 11:17 AM GMT)

பொதுத்துறையைச் சேர்ந்த ஐ.டீ.பீ.ஐ. வங்கி, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.5,763 கோடியை நிகர இழப்பாகக் கண்டுள்ளது.

மும்பை

பொதுத்துறையைச் சேர்ந்த ஐ.டீ.பீ.ஐ. வங்கி, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.5,763 கோடியை நிகர இழப்பாகக் கண்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.4,185 கோடியாக இருந்தது. ஆக, வங்கியின் இழப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.

இதே காலத்தில் இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் 13 சதவீதம் அதிகரித்து ரூ.1,532 கோடியாக உள்ளது. இதர வருவாய் 28 சதவீதம் உயர்ந்து ரூ.1,032 கோடியாக இருக்கிறது. வட்டியல்லா வருவாய் 83 சதவீதம் உயர்ந்து ரூ.1,278 கோடியாக உள்ளது. முந்தைய காலாண்டுடன் (2019 ஜூலை-செப்டம்பர்) ஒப்பிடும்போது நிகர வாராக்கடன் (5.97 சதவீதத்தில் இருந்து) 5.25 சதவீதமாக குறைந்து இருக்கிறது.

மும்பை பங்குச்சந்தையில், புதன்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது ஐ.டீ.பீ.ஐ. வங்கிப் பங்கு ரூ.36.40-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே குறைந்தபட்சமாக ரூ.34.40-க்கு சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.34.75-ல் நிலைகொண்டது. இது, செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 6.08 சதவீத வீழ்ச்சியாகும்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story