சிறப்புக் கட்டுரைகள்

நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில்சிண்டிகேட் வங்கி லாபம் 303% வளர்ச்சி + "||" + In the third quarter of the fiscal year Syndicate Bank profits up 303%

நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில்சிண்டிகேட் வங்கி லாபம் 303% வளர்ச்சி

நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில்சிண்டிகேட் வங்கி லாபம் 303% வளர்ச்சி
மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது சிண்டிகேட் வங்கிப் பங்கு ரூ.24.70-க்கு கைமாறியது.
பொதுத்துறையைச் சேர்ந்த சிண்டிகேட் வங்கி, நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (2019 அக்டோபர்-டிசம்பர்) ரூ.435 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.108 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 303 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

இதே காலத்தில் இவ்வங்கியின் மொத்த வருவாய் 4 சதவீதம் உயர்ந்து ரூ.6,317 கோடியாக இருக்கிறது. நிகர வட்டி வருவாய் 16 சதவீதம் அதிகரித்து ரூ.1,871 கோடியாக உள்ளது. மொத்த வாராக்கடன் (12.54 சதவீதத்தில் இருந்து) 11.33 சதவீதமாக குறைந்துள்ளது. நிகர வாராக்கடன் (6.75 சதவீதத்தில் இருந்து) 5.94 சதவீதமாக குறைந்து இருக்கிறது.

மும்பை பங்குச்சந்தையில், நேற்று வர்த்தகம் தொடங்கியபோது சிண்டிகேட் வங்கிப் பங்கு ரூ.24.70-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.25-க்கும், குறைந்தபட்சமாக ரூ.23.65-க்கும் சென்றது. இறுதியில் ரூ.23.90-ல் நிலைகொண்டது. இது, முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 1.44 சதவீத சரிவாகும்.