சிறப்புக் கட்டுரைகள்

இரண்டு தினங்கள் ஏற்றத்திற்குப் பின்சென்செக்ஸ் 106 புள்ளிகள் இழப்புநிப்டி 27 புள்ளிகள் இறங்கியது + "||" + After two days of loading Sensex loses 106 points

இரண்டு தினங்கள் ஏற்றத்திற்குப் பின்சென்செக்ஸ் 106 புள்ளிகள் இழப்புநிப்டி 27 புள்ளிகள் இறங்கியது

இரண்டு தினங்கள் ஏற்றத்திற்குப் பின்சென்செக்ஸ் 106 புள்ளிகள் இழப்புநிப்டி 27 புள்ளிகள் இறங்கியது
இரண்டு தினங்கள் தொடர் ஏற்றத்திற்குப் பின் வியாழக்கிழமை அன்று பங்கு வர்த்தகம் படுத்தது.
மும்பை

இரண்டு தினங்கள் தொடர் ஏற்றத்திற்குப் பின் வியாழக்கிழமை அன்று பங்கு வர்த்தகம் படுத்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 106 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 27 புள்ளிகள் இறங்கியது.

லாப நோக்கம்

பங்குச்சந்தைகள் இரண்டு தினங்கள் தொடர் ஏற்றம் கண்டிருந்த நிலையில் பல்வேறு நிறுவனப் பங்குகளின் விலையும் உயர்ந்து இருந்தது. எனவே லாபம் ஈட்டும் நோக் கத்துடன் பலரும் பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்தனர். பங்கு வியாபாரம் சரிய அது முக்கியக் காரணமாக இருந்தது.

மும்பை பங்குச்சந்தையில் நேற்று வங்கித் துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 0.94 சதவீதம் சரிந்தது. அடுத்து நிதித்துறை குறியீட்டு எண் 0.80 சதவீதம் இறங்கியது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் 14 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தது. 16 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது.

இந்தப் பட்டியலில் டைட்டான், பாரத ஸ்டேட் வங்கி, இன்போசிஸ், சன் பார்மா, டெக் மகிந்திரா உள்ளிட்ட 14 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தது. அதே சமயம் இண்டஸ் இந்த் வங்கி, என்.டி.பி.சி., டாட்டா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், கோட்டக் மகிந்திரா வங்கி உள்ளிட்ட 16 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 106.11 புள்ளிகள் சரிந்து 41,459.79 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 41,709.30 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 41,338.31 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1,057 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,432 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 157 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,193 கோடியாக குறைந்தது. கடந்த புதன்கிழமை அன்று அது ரூ.2,678 கோடியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 26.55 புள்ளிகள் குறைந்து 12,174.65 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 12,225.65 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 12,139.80 புள்ளிகளுக்கும் சென்றது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு