சிறப்புக் கட்டுரைகள்

பங்கு வெளியிட அனுமதி கேட்டு என்.சி.டீ.இ.எக்ஸ். விண்ணப்பம் + "||" + Asking for permission to issue stock NCDEX Application

பங்கு வெளியிட அனுமதி கேட்டு என்.சி.டீ.இ.எக்ஸ். விண்ணப்பம்

பங்கு வெளியிட அனுமதி கேட்டு என்.சி.டீ.இ.எக்ஸ். விண்ணப்பம்
என்.சி.டீ.இ.எக்ஸ். நிறுவனத்தில் பல்வேறு விளைபொருள்கள் மீது முன்பேர வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி

நேஷனல் கமாடிட்டி அண்டு டிரைவேட்டிவ்ஸ் எக்ஸ்சேஞ்சு நிறுவனம் (என்.சி.டீ.இ.எக்ஸ்) பங்கு வெளியிட அனுமதி கேட்டு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு விண்ணப்பித்துள்ளது.

விளைபொருள்கள்

என்.சி.டீ.இ.எக்ஸ். நிறுவனத்தில் பல்வேறு விளைபொருள்கள் மீது முன்பேர வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நேஷனல் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சு, இந்தியன் கமாடிட்டி எக்ஸ்சேஞ்சு, எம்.சி.எக்ஸ். ஆகியவையும் இதே துறையைச் சேர்ந்த நிறுவனங்களாகும். நம் நாட்டில் தற்போது பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டு இருக்கும் ஒரே விளைபொருள் முன்பேர வர்த்தகச் சந்தை எம்.சி.எக்ஸ். ஆகும்.

இந்நிறுவனம் தனது விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான பகுதி நிதியை திரட்டும் நோக்கத்துடன் புதிய பங்குகள் வெளியிட உத்தேசித்துள்ளது. எனவே அதற்கு அனுமதி வேண்டி செபி அமைப்பிற்கு விண்ணப்பித்து இருக்கிறது. இதில் ரூ.100 கோடிக்கு புதிய பங்குகள் வெளியிடப்பட உள்ளன. பங்குதாரர்களின் பழைய பங்குகளும் சந்தைக்கு வருகின்றன. மொத்தத்தில் இந்த வெளியீடு மூலம் ரூ.500 கோடி வரை திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

என்.சி.டீ.இ.எக்ஸ். நிறுவனத்தில் தேசிய பங்குச்சந்தை (என்.எஸ்.இ) மிகப்பெரிய பங்குதாரராக உள்ளது. அதாவது அதன் பங்கு மூலதனம் அதிகபட்சமாக 15 சதவீதமாக இருக்கிறது. அடுத்து எல்.ஐ.சி. நிறுவனமும், நபார்டு வங்கியும் தலா 11.10 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளன. இஃப்கோ நிறுவனத்திற்கு 10 சதவீத பங்குகள் இருக்கிறது. ஓமன் இந்தியா ஜாயிண்ட் இன்வெஸ்ட்மெண்ட் பண்டுக்கு 10 சதவீத பங்குகளும், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 7.29 சதவீத பங்குகளும் இருக்கின்றன. கனரா வங்கியும், ஐ.டீ.எப்.சி. பிரைவேட் ஈக்விட்டி பண்டும் முறையே 6 சதவீதம் மற்றும் 5 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளன.

பங்குதாரர்கள்

என்.சி.டீ.இ.எக்ஸ். பங்கு வெளியீட்டில் சில பங்குதாரர் கள் முழுமையாக தமது பங்குகளை விற்று விட்டு வெளி யேறுவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது. சிலர் பகுதி அளவு பங்குகளை விற்பனை செய்து விட்டு நிறுவனத்தில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு