தேர்தலில் நின்ற நாய்


தேர்தலில் நின்ற நாய்
x
தினத்தந்தி 14 Feb 2020 10:29 AM GMT (Updated: 14 Feb 2020 10:29 AM GMT)

அமெரிக்காவில் கடந்த 2018-ம் ஆ்ணடு இந்த அதிசயம் நடந்தது. அங்குள்ள கன்சாஸ் மாகாண ஆளுநர் பதவிக்கு 6 இளைஞர்கள் போட்டி போட்டனர்.

டெரன் ஊல்லி என்பவர் தனது நாயையும் தேர்தலில் போட்டியிட வைக்க மனு தாக்கல் செய்தார். அங்குஸ் என்ற அந்த நாய்க்கு 23 வயதாவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த நாய்க்காக உருவாக்கப்பட்ட பேஸ்புக் இணையப் பக்கத்தில் சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு பிரசாரம் செய்யப்பட்டது. “நாய்களுக்கான மென்மையான படுக்கைகள், தற்காலிக படுக்கைகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். எல்லோருக்கும் கவ்வி விளையாட பந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். அணில் எதிர்ப்பு அஜெண்டா கொண்டு வரப்படும்” என்பது போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தன.

ஆனால் கவர்னர் பதவிக்கு நாய் போட்டியிட முடியாது என்று அதன் மனு நிராகரிக்கப்பட்டதால், அங்கஸ் பிரச்சாரம்,சில நாட்களுடன் முடிவுக்கு வந்தது.

Next Story