சிறப்புக் கட்டுரைகள்

ராட்சத நத்தை + "||" + Giant snail

ராட்சத நத்தை

ராட்சத நத்தை
முதுகெலும்பில்லாத உயிரினங்களில் நத்தை குறிப்பிடத்தக்கது. வெறும் நெகிழும் உடலுடன் இருந்தாலும் இவை மாமிசத்தை செரித்து வாழும் திறன் கொண்டவை. சில நேரங்களில் தன் இனத்தையே சாப்பிடக்கூடியவை.
நத்தையின் வேட்டையாடும் திறன் கொஞ்சம் மூர்க்கமாக இருக்கும். வலிமையான தங்களுடைய நாக்கால் மற்றொரு நத்தையின் மேல் ஓட்டில் ஓட்டை போட்டு உள்ளே உள்ள உயிரினத்தை சூப் போல உறிஞ்சி சுவைத்து சாப்பிட்டுவிடுகிறது.

இத்தகைய நத்தை இனங்களில் குறிப்பிடத்தக்கது ஆப்பிரிக்காவின் ராட்சத நத்தை. இவைதான் உலகின் பெரிய நத்தை இனமாகும். அதிவேகமாக இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை இவை. 3 வருடங்களில் பல லட்சம் நத்தைகளாக பெருகிவிடக்கூடியவை.

ஒரு சராசரி பூனைக்குட்டி அளவுக்கு வளரக்கூடிய இந்த நத்தையை, மற்ற நத்தையைப்போல விளையாட்டாக எண்ணி கையில் சிலர் தூக்குவது உண்டு. ஆனால் இவற்றின் உடலில் உள்ள ஒருவித ரசாயனம், மனிதனுக்கு மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தி கொல்லும் ஆபத்து கொண்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...