இந்திய நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள்


இந்திய நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள்
x
தினத்தந்தி 14 Feb 2020 12:13 PM GMT (Updated: 14 Feb 2020 12:13 PM GMT)

இந்திய நிறுவனங்கள் தமது 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.

ந்திய நிறுவனங்கள் தமது 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. முன்னணி நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் வருமாறு:-

சுஸ்லான் எனர்ஜி

சுஸ்லான் எனர்ஜி நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் (2019) ரூ.743 கோடியை ஒட்டுமொத்த நிகர இழப்பாகக் கண்டுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அதன் இழப்பு ரூ.40 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய் (ரூ.1,112 கோடியில் இருந்து) ரூ.673 கோடியாக குறைந்துள்ளது.

நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில் (2019 ஏப்ரல்-டிசம் பர்) இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த இழப்பு (ரூ.1,243 கோடியில் இருந்து) ரூ.1,858 கோடியாக உயர்ந்துள்ளது.

சாட்டின் கிரெடிட் கேர்

குறுங்கடன் நிதி நிறுவனமான சாட்டின் கிரெடிட் கேர், 2019 டிசம்பர் காலாண்டில் ரூ.48 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இது 32 சதவீத சரிவாகும். இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வாராக்கடன் (3.2 சதவீதத்தில் இருந்து) 3.1 குறைந்து இருக்கிறது. நிகர வாராக்கடன் (1.2 சதவீதத்தில் இருந்து) 0.9 குறைந்துள்ளது.

ஹிண்டால்கோ

ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.1,062 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.1,394 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 24 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 12 சதவீதம் சரிந்து (ரூ.33,213 கோடியில் இருந்து) ரூ.29,197 கோடியாக குறைந்துள்ளது. ஒட்டுமொத்த லாபம் 10 சதவீதம் குறைந்து ரூ.3,676 கோடியாக இருக்கிறது.

சாலெட் ஹோட்டல்ஸ்

சாலெட் ஹோட்டல்ஸ் நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.33 கோடியை நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.14 கோடியாக இருந்தது. ஆக, லாபம் இரண்டு மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் (ரூ.255 கோடியில் இருந்து) ரூ.285 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

அரவிந்த் பேஷன்ஸ்

அரவிந்த் பேஷன்ஸ் நிறுவனம், மூன்றாவது காலாண்டில் (2019 அக் டோபர்-டிசம்பர்) ரூ.51 கோடியை ஒட்டுமொத்த நிகர இழப்பாகக் கண்டுள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனம் ரூ.8 கோடி லாபம் ஈட்டி இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் (ரூ.1,259 கோடியில் இருந்து) ரூ.1,135 கோடியாக குறைந்து இருக்கிறது.

இன்போ எட்ஜ்

இன்போ எட்ஜ் நிறுவனம், 2019 அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.62 கோடியை ஒட்டுமொத்த இழப்பாகக் கண்டு இருக்கிறது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனம் ரூ.330 கோடியை ஒட்டுமொத்த லாபமாக ஈட்டி இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் (ரூ.323 கோடியில் இருந்து) ரூ.360 கோடியாக உயர்ந்துள்ளது.

வெல்ஸ்பன் இந்தியா

வெல்ஸ்பன் இந்தியா நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.75 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் அது ரூ.50 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு (ரூ.1,640 கோடியில் இருந்து) ரூ.1,665 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

Next Story