மாவட்ட செய்திகள்

சவுதி அரேபியா நாட்டில் இறந்த தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும்உதவி கலெக்டரிடம் உறவினர்கள் கோரிக்கை + "||" + The body of a dead worker in Saudi Arabia must be brought home

சவுதி அரேபியா நாட்டில் இறந்த தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும்உதவி கலெக்டரிடம் உறவினர்கள் கோரிக்கை

சவுதி அரேபியா நாட்டில் இறந்த தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும்உதவி கலெக்டரிடம் உறவினர்கள் கோரிக்கை
கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
கோவில்பட்டி, 

சவுதி அரேபியா நாட்டில் இறந்த தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி அவருடைய உறவினர்கள், கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

கூலி தொழிலாளி 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிவந்திபட்டி கீழ தெருவைச் சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மனைவி அல்லி பாப்பா. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள். இளைய மகன் வேல்முருகன் (வயது 31). இவர் கடந்த 1½ ஆண்டாக சவுதி அரேபியா நாட்டில் ரியாத் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.

இவருடைய அண்ணன் மற்றும் 2 அக்காள்களுக்கு திருமணமாகி விட்டது. இந்த நிலையில் வடிவேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட அல்லி பாப்பா தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

உதவி கலெக்டரிடம் கோரிக்கை 

இந்த நிலையில் சவுதி அரேபியா நாட்டில் வேலை செய்த வேல்முருகன் இறந்ததாக, சிவந்திபட்டி வருவாய் ஆய்வாளர் நேற்று முன்தினம் அல்லி பாப்பாவிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அல்லிபாப்பா மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து அவர்கள், வேல்முருகனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் சென்று, உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

மனுவை பெற்று கொண்ட உதவி கலெக்டர் விஜயா, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.