மூளையை பாதிக்கும் ‘செல்போன்’


மூளையை பாதிக்கும் ‘செல்போன்’
x
தினத்தந்தி 16 Feb 2020 9:34 AM GMT (Updated: 16 Feb 2020 9:34 AM GMT)

செல்போன், டி.வி.யில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள் மழலை வகுப்பில் சேரும்போதே உடல் இயக்க செயல்பாட்டு பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக்கு சிங்கப்பூரை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டனர். ஆய்வின் முடிவில் இரண்டு முதல் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் செல்போன், டேப்லட், டி.வி. போன்ற காட்சி வழி ஊடகங்களை தினமும் மூன்று மணி நேரம் அல்லது அதற்கு அதிகமாக பார்த்தால் அவர்களின் உடல் வளர்ச்சியும், உடல் இயக்க செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாவது கண்டறியப்பட்டுள்ளது. 5 வயதுக்குள் சுறுசுறுப்பு தன்மை குறைந்து போய்விடுவதும், பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு முன்பாக அவர்களது உடல் இயக்க திறனில் பாதிப்பு வெளிப்படுவதும் தெரியவந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளபடி தினமும் ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரமே திரை காட்சிகளை பார்க்க வேண்டும். குழந்தை பருவத்தில் அதிக நேரம் திரை காட்சிகளை பார்வையிடும்போது உடல் பருமன் மற்றும் மூளை செயல் திறன் குறைபாடு போன்றவைகளும் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.


Next Story