கூகுளின் ஜி-சூட்


கூகுளின் ஜி-சூட்
x
தினத்தந்தி 17 Feb 2020 11:09 AM GMT (Updated: 17 Feb 2020 11:09 AM GMT)

கூகுள் வழங்கும் கல்விசார் அப்ளிகேசன்களில் இதுவும் ஒன்று. கற்றல், நிர்வாக பணிகளை ஒழுங்கு படுத்துதல் மற்றும் விமர்சன ரீதியாக சிந்திக்க தங்கள் மாணவர்களை தயார்படுத்த வல்லது இந்த அப்ளிகேசன்.

கூகுள் சூட் (G suite) அப்ளிகேசன் இலவசமாக பயன் படுத்த அனுமதிக்கப்படுகிறது. கூகுள் கிளாஸ்ரூம் போலவே மாணவர்களுக்கு பல்வேறு கற்றல் நுட்பங்களையும், வழிநடத்தல் வசதிகளையும் கொண்டுள்ளது.

சொல்லப்போனால் அதற்கும் ஒருபடி மேலாக பயிற்சி மையமாகவும் செயல்பட வல்லது. பல்வேறு பயிற்சி மையங்கள் ஒன்றிணைக்கப்பட்டதாக ஆசிரியர் குழுக்களை இணைத்து கற்றலை, மாணவர் ஆற்றலை மேம் படுத்த துணை செய்கிறது ஜி-சூட் அப்ளிகேசன். உடனடியாக தகவல் பரிமாற்றங்கள், பதில்கள் கிடைக்கும். மாணவர்களை பின்தொடர முடியும். மாணவர்களுக்கான பாடங்களை வழங்குவது, அவர்களுக்கான மதிப்பெண் வரிசைப்பட்டியலை உருவாக்குவது போன்ற வழக்கமான வசதிகளும் இதில் உள்ளன. இது ஆன்லைன் - ஆப்லைன் இரு முறையிலும் செயல்படும்.

Next Story