சிறப்புக் கட்டுரைகள்

கொரோனாவை கைகழுவுங்கள் + "||" + Hand washing Corona

கொரோனாவை கைகழுவுங்கள்

கொரோனாவை கைகழுவுங்கள்
உலகை அச்சுறுத்தும் கொரோனோ பாதிப்பு உள்ளிட்ட பல நோய்களை கைகழுவுவதன் மூலம் தடுக்கலாம் என்கிறது அமெரிக்காவின் எம்.ஐ.டி. ஆராய்ச்சிக்குழு.
சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து உலகையே பயமுறுத்தும் கொரோனா உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மக்கள் சுகாதார விழிப்புணர்வு இன்றி இருப்பதே காரணம் என்று கூறுகிறது அந்த ஆராய்ச்சியாளர்கள் குழு.

தற்போதைய நிலையில் உலகின் முக்கியமான 10 விமான நிலையங்களுக்கு சென்று திரும்புபவர்கள் கைகளை சுத்தமாக பராமரிப்பதன் மூலம் நோய் தொற்றுகதை தவிர்க்கலாம் என்கிறார்கள். விமான நிலையத்திற்கு வந்து செல்பவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் மட்டுமே கைகளை சுகாதாரமாக வைத்திருக்கிறார்கள்.

மற்றவர்கள் சாதாரணமான மனநிலையுடன் எல்லாவற்றையும் தொடுகிறார்கள், சுகாதாரமின்றி கடந்து செல்கிறார்கள். கழிவறை கதவுகள், பொருட்கள் யாவற்றையும் சாதாரணமாக பயன்படுத்தும் இவர்கள் கைகழுவுவதில் அதிக அக்கறை காட்டுவதில்லை என்கிறது ஆய்வுக்குழு.

கழிவறைக்குச் சென்று திரும்பிய பின்பு 70 சதவீதம் பேர் கைகளை கழுவினாலும், அவர்களிலும் 50 சதவீதம் பேர்தான் சரியான முறையில் கிருமி நாசினி உதவியுடன், குறிப்பிட்ட நேரத்திற்கு கைகழுவுகிறார்கள். கிருமிநாசினியின்றி 15 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் கைகழுவுவது முறையானதல்ல. மீதி 30 சதவீதம் பேர் முற்றிலும் கைகழுவுவதில்லை. இத்தகைய சுகாதாரத் தன்மையற்ற வழக்கமே 70 சதவீத நோய் பரவுதலுக்கு காரணம் என்கிறது ஆராய்ச்சிக்குழு.