பேசல் 3 கடன்பத்திரங்கள் மூலம் ஐசிஐசிஐ வங்கி ரூ.945 கோடி திரட்டியது


பேசல் 3 கடன்பத்திரங்கள் மூலம் ஐசிஐசிஐ வங்கி ரூ.945 கோடி திரட்டியது
x
தினத்தந்தி 18 Feb 2020 10:38 AM GMT (Updated: 18 Feb 2020 10:38 AM GMT)

தனியார் துறையில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஐசிஐசிஐ வங்கி பேசல் 3 கடன்பத்திரங்கள் மூலம் ரூ.945 கோடி திரட்டி உள்ளது.

னியார் துறையில் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஐசிஐசிஐ வங்கி பேசல் 3 கடன்பத்திரங்கள் மூலம் ரூ.945 கோடி திரட்டி உள்ளது.

பேசல் 3 விதிமுறை என்பது சர்வதேச அளவில் அனைத்து வங்கிகளும் தமது மூலதன இருப்பை அதிகரிக்க வேண்டிய விதியாகும். 2013 ஏப்ரல் 1-ந் தேதி முதல் இந்திய வங்கிகள் இந்த விதிக்கு இணங்க நிதி திரட்டி வருகின்றன. இந்திய வங்கிகள் நடப்பு ஆண்டு (2020) மார்ச் 31-ந் தேதிக்குள் இந்த விதிமுறையை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேசல் 3 கடன்பத்திரங்கள் மூலம் பொதுத்துறை வங்கிகள் தீவிரமாக நிதி திரட்டி வருகின்றன. இந்நிலையில், ஐசிஐசிஐ வங்கி பேசல் 3 விதிகளுடன் பொருந்தும் 9,450 கடன்பத்திரங்கள் மூலம் ரூ.945 கோடி திரட்டி இருக்கிறது. இந்த ஒதுக்கீடு நேற்று நடைபெற்றது.

Next Story