சென்செக்ஸ் பட்டியலில் டைட்டான் கம்பெனி பங்கு அதிக ஏற்றம் ஓ.என்.ஜி.சி. பங்கு விலை அதிக சரிவு


சென்செக்ஸ் பட்டியலில் டைட்டான் கம்பெனி பங்கு அதிக ஏற்றம் ஓ.என்.ஜி.சி. பங்கு விலை அதிக சரிவு
x
தினத்தந்தி 18 Feb 2020 11:21 AM GMT (Updated: 18 Feb 2020 11:21 AM GMT)

மும்பை பங்குச்சந்தையில் திங்கள்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது டைட்டான் கம்பெனி பங்கு ரூ.1,297-க்கு கைமாறியது.

மும்பை

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸை கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் நேற்று டைட்டான் கம்பெனி பங்கு அதிகபட்ச ஏற்றம் கண்டது. அதே சமயம் ஓ.என்.ஜி.சி. பங்கு விலை அதிக சரிவு கண்டது.

மும்பை பங்குச்சந்தையில் திங்கள்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது டைட்டான் கம்பெனி பங்கு ரூ.1,297-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.1,321-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,288.80-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.1,316.35-ல் நிலைகொண்டது. இது கடந்த வார இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 1.86 சதவீத உயர்வாகும்.

நேற்று ஓ.என்.ஜி.சி. நிறுவனப் பங்கு தொடக்கத்தில் ரூ.101.85-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.102.90-க்கும், குறைந்தபட்சமாக ரூ.98.85-க்கும் சென்றது. இறுதியில் ரூ.99.95-ல் நிலைகொண்டது. கடந்த வெள்ளிக்கிழமை இறுதி நிலவரத்தைக் காட்டிலும் இது 3.20 சதவீதம் சரிவாகும்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Next Story